திரிஷா துணை முதல்வர் ஆனாலும் வியப்பதற்கு இல்லை.. விஜய்யை விட்டு விளாசிய ஆர்பி உதயகுமார்
சென்னை: நடிகை திரிஷாவை துணை முதல்வராக முதல்வர் விஜய் அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசின் முக்கிய பதவிகள் தனிப்பட்ட நட்பு மற்றும் நெருக்கத்தின் அடிப்படையில், எதோ சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரங்கள் வழங்கப்படுவது போல் வழங்கப்படுகின்றன எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வராக வந்துவிட்டால் எதோ தமிழ்நாடே தனது தனது அப்பன் வீட்டு சொத்தாகவும், தாத்தா வீட்டு சொத்தாகவும் வந்து விடுகிறதோ என்று நினைக்கிறாரோ? என்று தெரியவில்லை எனவும் விஜய்யை விமர்சித்து ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ஆர் பி உதயகுமார் கூறியதாவது:-

ஆர் பி உதயகுமார் விமர்சனம்
தனக்கு ஜாதகத்தை கணித்து கூறும் ரத்தன் பண்டிட் அவர்களை தனது அரசியல் ஆலோசகராக த.வெ.க அரசு நியமனம் செய்தது. அதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பிறகு அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை எல்லோருக்கும் ஜாதகத்தை கணித்து கொடுக்கிற ரத்தன் பண்டிட் தன்னுடைய ஜாதகத்தை சரியாக கணிக்க தவறினாரோ என்னவோ?..
அதற்குப் பிறகு தன்னுடைய மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி, தன்னுடைய வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோரை அதிகாரப்பூர்வமான பவர் சென்டராக வைத்துக்கொண்டார். அதிகாரப்பூர்வமான பவர் சென்டராக உள்ளவர்கள் முதல்வர் விஜயின் நட்புக்கு இலக்கணமாக இருப்பவர்கள் இருக்கிறார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிகிறது.. தெரிகிறது.
சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரம் வழங்குவது போல..
தமிழக முதல்வராக வந்துவிட்டால் எதோ தமிழ்நாடே தனது தனது அப்பன் வீட்டு சொத்தாகவும், தாத்தா வீட்டு சொத்தாகவும் வந்து விடுகிறதோ என்று நினைக்கிறாரோ? மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள்.. ஐந்தாண்டுகளுக்கு தான் மக்கள் வழங்கி உள்ளார்கள்.. அதுவும் நீங்கள் மெஜாரிட்டி இல்லாத ஒரு மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டு, இப்படி தமிழகத்தினுடைய உரிமையை காக்கின்ற.. எட்டு கோடி மக்களின் உரிமை காக்கும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்கிற பெருமை வாய்ந்த இப்பதவியை சினிமாவில் தன்னோடு பழகியவர்கள் என்கிற காரணத்தினாலேயே, திரைப்படங்களில் முக்கிய ரோல் தருவதைப் போல, முக்கிய கதாப்பாத்திரம் வழங்குவது போல இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வராக திரிஷா..
8 கோடி தமிழர்களுடைய உரிமையை நிலைநாட்ட ஒரு தமிழர் கிடைக்கவில்லையா நம்ம முதல்வர் விஜய் அவர்களுக்கு? தமிழ்நாட்டின் உரிமையை டெல்லியில் நிலைநாட்டிட கர்நாடகாவை சேர்ந்த பிரபல சினிமா பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமித்திருக்கிறது இந்த அரசு.. ஒன்று புரிகிறது விஜய் வைத்து வைத்து படம் எடுத்தவர்கள், தன் படத்துல நடிப்பவருக்கு, மேனேஜராக இருந்தவர்களுக்கு.. ஜெகதீஷ் பழனிச்சாமி, ஜான் ஆரோக்கியசாமி, ராதன் பண்டிட், வெங்கட் நராயணா.. இப்படி எல்லோருக்கும் அரசு பதவி வழங்கிய மாண்புமிகு முதல்வர் விஜய் நட்புக்கும், உறவுக்கு இலக்கணமாக இருக்கின்ற பிரபல திரைப்பட கதாநாயகியாக இருக்கிற திரிஷா கூட விரைவில் துணை முதல்வர் என்ற அறிவிப்பு வெளியாகலாம்.. ஏனென்றால் ஜனநாயக நாட்டில் எதுவும் நடக்கலாம்..
ஏனென்றால் விஜய் அவர்கள் நட்புக்கு இலக்கணமாக இருப்பதனால் எல்லாருக்கு அரசு பணி வழங்குகிறார். எனவே நட்புக்கும், உறவுக்கும் இலக்கணமாக இருக்கிற திரைப்பட கதாநாயகியான மேடம் திரிஷா துணை முதல்வராக அறிவிக்க முதல்வர் விஜய் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பை வெளியிடலாம் என்கிற அதிர்ச்சியிலே உறைந்து போயிருக்கிறது தமிழகம். முதல்வர் விஜய்யின் உடல் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால் கான்பிடெண்டா இருங்க. நல்லதே நடக்கும்!" இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தை சாராத கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதியாக தவெக அரசு நியமித்ததன் காரணமாகவே ஆர்பி உதயகுமார் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார்.















Click it and Unblock the Notifications