விவசாயிகளுக்கு செயற்கை பேரிடர் பரிசு.. வேளாண் பட்ஜெட் வெற்று அறிக்கை.. டிடிவி தினகரன் தாக்கு
சென்னை: இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் தி.மு.க அரசின் வேளாண் பட்ஜெட் என்று தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். விவசாயிகள் எதிர்பார்த்த எந்த புதிய திட்டங்களும் இல்லாத வேடிக்கை பட்ஜெட்டையே திமுக அரசு தாக்கல் செய்திருக்கிறது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 சட்டமன்ற தேர்தலின் போது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் எனும் தலைப்பில் திமுக அளித்த 55 வாக்குறுதிகளில் சிலவற்றைக் கூட நிறைவேற்ற முடியாத, நிறைவேற்ற முன்வராத திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் வேளாண் பட்ஜெட் தமிழக விவசாயிகளுக்கு எந்தவகையிலும் பயனளிக்காத வெற்று பட்ஜெட்.

தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை நிறைவேற்றவில்லை. வேளாண் விலை பொருட்களுக்கு தகுந்த விலை நிர்ணயம். 33ல் சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி. அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும். விலை நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது தடுத்து நிறுத்தப்படும்
மின் இணைப்பு கோரும் விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு. வேளாண் மகளிருக்கு 30 சதவிகிதம் மானியம். மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். நெல்லுக்கு 2500 ரூபாயும், கரும்புக்கு 4000 ரூபாயும் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்படியான எண்ணற்ற நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த திமுக, அந்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்ததோடு, வேளாண் குடிமக்கள் மீது சிறிதளவும் அக்கறையில்லாத வெற்று அறிக்கையை வேளாண் பட்ஜெட் எனும் பெயரில் 4வது ஆண்டாக இன்று தாக்கல் செய்திருக்கிறது.
கடந்த ஆண்டு காவிரியில் இருந்து உரிய நீரை பெற்றுத் தர முடியாத திமுக அரசால் டெல்டா பகுதிகளில் பயிரப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகியதோடு விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. அண்மையில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மீண்டு வருவதற்கான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த திட்டங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
'கடைமடைக்கும் பாசன நீர்' என்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் நிறைவேறா ஆசையாகவே உள்ளது. கடந்த ஆண்டுகளில் தூர்வாரும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் மூலமாக எந்த பணிகளும் முறையாக நடைபெறாத நிலையில் நடப்பாண்டிலும் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.10 கோடி ரூபாயில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் என்ற நம்பிக்கை டெல்டா விவசாயிகளிடம் துளியளவும் இல்லை.
கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மதுரை மல்லிக்கு ஓர் இயக்கம், பலா இயக்கம், முருங்கை இயக்கம், மிளகாய் மண்டலம், கறிவேப்பிலை தொகுப்பு என எந்தவிதமான திட்டங்களும் செயல்பாட்டிற்கு வராத நிலையில் நடப்பாண்டில் புதுப்புது பெயர்களில் திட்டங்களை அறிவிப்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலையே தவிர அதனால் எந்த பலனும் கிடைக்கப்போவதாக தெரியவில்லை.
பருவம் தவறிய கனமழையாலும், இயற்கை பேரிடராலும் பாதிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்க சிறப்பு திட்டம், மாநில அரசே முழுமையான பயிர்க்காப்பீடு வழங்கும் திட்டம், இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான பெருந்திட்டங்கள், சிறு தானியங்களை அரசே கொள்முதல் செய்யும் திட்டம், காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் என விவசாயிகள் எதிர்பார்த்த எந்த புதிய திட்டங்களும் இல்லாத வேடிக்கை பட்ஜெட்டையே திமுக அரசு தாக்கல் செய்திருக்கிறது.
மொத்தமாக பார்க்கும் போது கடந்த மூன்று ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளின் கலவையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நடப்பு ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை, ஏற்கனவே இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதே தவிர காலமெல்லாம் போராடும் விவசாயிகளின் கண்ணீரை துடைக்கும் வகையிலோ, அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலோ எந்தவிதமான அறிவிப்புகளும் இல்லாத வெற்று அறிக்கையாகவே அமைந்துள்ளது.
விவசாயிகளின் கண்ணீருக்கு வீரியம் அதிகம் என்பதை உணராத திமுக அரசின் ஆயுட்காலம் முடியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை வரும் தேர்தலில் விவசாயிகள் உணர்த்துவார்கள் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications