எடப்பாடி முதல்வரா? நயினார் நாகேந்திரனின் கனவு பலிக்காது - டிடிவி தினகரன் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என கனவு காண்கிறார். அது நிச்சயம் பலிக்காது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். அதிமுக என்ற கட்சியை எடப்பாடி பழனிச்சாமி இழுத்து மூடிவிட்டு எடப்பாடி திமுக என மாற்றி கட்சி நடத்தி வருவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார்.

TTV Dhinakaran Says Nainar Nagendran s Dream of EPS-Led Government Will Never Work

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், "முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர், அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சிக்கு அவர் உருவாக்கிய விதிகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நீக்கி விட்டார். புதிய விதிகளை உருவாக்கி தன்னை பொதுச் செயலாளராக அறிவித்துக் கொண்டார். ஆனால், எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து களைகளை நீக்கி விட்டதாக தெரிவிக்கிறார். உண்மையில் அவர் துரோகத்தின் நஞ்சு செடியாக இருந்து கட்சியை அழித்து வருகிறார். தற்போது உள்ளது அதிமுக இல்லை. பழனிசாமி உருவாக்கிய கட்சி. அதிமுக என்ற கட்சியை எடப்பாடி பழனிசாமி இழுத்து மூடிவிட்டு எடப்பாடி திமுக என மாற்றி கட்சி நடத்தி வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில் அமமுக கூட்டணி துரோகிகளுக்கு பாடம் புகட்டும்.

மேலும் பேசிய டிடிவி தினகரன், "கடந்த அரசு வாங்கிய கடனை, தற்போதுள்ள அரசு கட்டுவது போல, இப்போது உள்ள ஆட்சியாளர்கள் வாங்கிய கடனை அடுத்து வருபவர்கள் கட்டுவார்கள். இந்தியா வளர்ந்து வரும் நாடு. அதில் தமிழ்நாடு வளர்ச்சி நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில், இன்னமும் இங்கு பலதரப்பு மக்கள் வாழ்வாதாரம் முன்னேறாமல் உள்ளது. அவர்களுக்கான திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தலாம்.

ஆனால், இலவச திட்டங்கள் அதிகமாக உள்ளது. இதனை அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும். பொதுமக்களும், அரசு தேவையற்ற திட்டங்களை அரசு அறிவித்தால் அதனை புறந்தள்ள வேண்டும். அந்த வகையில் திமுக அரசு அறிவித்த பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சி பிடிக்க முடியாத காரணத்தினால் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் வழங்குகிறது.

பாஜகவினர் ஆட்சி அமைய பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றனர். ஆனால் அதனை முறையாக ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வகையில் வழிவகை செய்ய வேண்டும். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் என கனவு காண்கிறார். அது நிச்சயம் பலிக்காது.

மேலும், கரூரில் நடந்த துயர சம்பவம் ஒரு விபத்து. சதிவேலை அல்ல. அதில், விஜய் மீதும், காவல்துறை என்று யார் மீதும் குற்றம் சொல்ல இயலாது. சில கட்சியினர் இதனை அரசியல் ஆக்குகிறார்கள். அதே நேரத்தில் இது தொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து உண்மையை சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+