டிடிவி தினகரன் உடன் இணையும் ஓபிஎஸ்! அடுத்து சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் அறிவிப்பு!
சென்னை: ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூட்டாக அறிவித்துள்ளனர். இதில் அவர்கள் வேறு சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்திருந்தனர்.
இன்றைய தினம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்தார். ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் சென்றுள்ளார்.
டிடிவி தினகரனை தொடர்ந்து சசிகலாவையும் ஓபிஎஸ் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

முக்கிய சந்திப்பு: இந்தச் சந்திப்பில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இத்தனை காலம் தனித்தனியாகச் செயல்பட்டனர். இப்போது அதே லட்சியத்தை அடைய இருவரும் கூட்டாகச் செயல்பட உள்ளனர். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எப்படி ஒரு working arrangement வைத்துச் செயல்படுகிறார்களோ.. அதேபோல இனிமேல் இருவரும் செயல்படுவார்கள்" என்றார்.
மேலும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை என்று தெரிவித்த அவர், இரு தண்டவாளத்தைப் போலச் சட்ட ரீதியான போராட்டம் தொடரும் என்றும் தொண்டர்களுடன் இதுபோல பயணிப்பதும் தொடரும் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அதிமுக எதிர்காலம்: தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "கடந்த காலங்களைப் பற்றிப் பேசக் கூடாது. கடந்த காலங்களைப் பற்றிப் பேசினால் உணர்ச்சி மேலிட்டுப் பிரிவும் பேதங்களும் தான் வரும். நாம் இனி எதிர்காலத்தைப் பற்றியே பேச வேண்டும். கடந்த காலத்தைப் பற்றிப் பேசினால் நீங்கள் இதைச் சொன்னார்கள் அதைச் சொன்னீர்கள் என்றே பேச்சு இருக்கும். அது கட்சியை வளர்க்கப் பயன்படாது.
எனவே, தான் நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும். நடக்கப் போகும் செயல்கள் நல்லவையாகவே இருக்கட்டும். இனி நாம் அதிமுக எதிர்காலம் குறித்தே பேச வேண்டும். கடந்த கால பேச்சுகள் குறித்துப் பேசத் தேவையில்லை.

சுயநலம்: எடப்பாடி பழனிசாமி சுயநலமாக யாரையும் சேர்க்காமல் செயல்பட்டு வருகிறார்.. எடப்பாடி தரப்பினர் தான் பாஜகவுடன் கூட்டணி என்று சொல்கிறார்கள். பாஜகவில் இருந்து யாரும் இந்த கூட்டணியை உறுதி செய்யவில்லை. எனவே, கூட்டணி குறித்து எல்லாம் தேர்தல் நேரத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
தொண்டர்களின் கோரிக்கையை ஏற்றே இரு தலைவர்களும் இன்று சந்தித்து உள்ளனர் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், விரைவில் சசிகலாவையும் சந்திக்க உள்ளதாகவும் ஜெயலலிதா காலத்து அதிமுகவைக் கொண்டு வரவே நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு வரும் காலங்களில் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தச் சந்திப்பிற்கு அதிமுக வட்டாரங்கள் என்ன சொல்லப் போகிறது என்பது குறித்தும் பெரும் எதிர்பார்ப்பே நிலவி வருகிறது.
-
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications