அமமுகவுடன் இருப்பது தொண்டர் படை.. பழனிச்சாமியுடன் இருப்பது டெண்டர் படை.. இதுதான் டிடிவியின் ரைமிங்!
சென்னை: அமமுகவுடன் இருப்பது தொண்டர் படை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருப்பது டெண்டர் படை என்றும் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்காக அண்மையில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு அமமுக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அண்ணன் பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார். அமமுகவில் இருப்பது தொண்டர் படை! அம்மாவின் கட்சியை மீட்க போராடும் லட்சியப் படை! தேர்தல் அரசியலைத் தாண்டி இப்படை எப்போதும் களத்தில் நிற்கும்.
பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை! ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை மட்டுமே அது அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கும். அதன்பிறகு என்னவாகும் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்." என தெரிவித்துள்ளார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications