டிடிவி தினகரன் திணறடிக்கிறாரே.. எடப்பாடி பழனிசாமி ரிவர்ஸ் கியர்.. குண்டை தூக்கி போட்ட பாஜக.. போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பலவித பரபரப்புகளுக்கு நடுவில், பலவித முட்டுகட்டைகளுக்கு நடுவில், இந்த மதுரை மாநாட்டை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமாக நடத்தி முடித்து காட்டியிருக்கிறார். இதையடுத்து பாஜகவின் ரியாக்‌ஷன் என்ன? ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு பாஜக தரப்பில் சொல்லப்படுவதென்ன? என்பது குறித்த சில தகவல்கள் கசிந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திருச்சியில் மாநாடு நடத்தியிருந்தார்.. தனக்கான பலம் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் டீம் இருந்ததால், இந்த மாநாட்டை கூட்டியிருந்தார் ஓபிஎஸ்.

TTV Dinakaran Major Decision and What BJP told O Panneerselvam about MP Election alliance

ஓபிஎஸ் மாநாடு: இந்த மாநாட்டை பொறுத்தவரை, எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தபடியே இருந்தன.. காரணம், சசிகலா, தினகரன் மாநாட்டுக்கு வரவில்லை.. எதிர்க்கட்சிகளே இந்த மாநாடு குறித்து விமர்சிக்க துவங்கின.

"தொண்டர்கள் தங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற ஓபிஎஸ் சொல்லியும், பணம், சாப்பாடு, குவார்ட்டர் என தந்தும்கூட, தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க முடியவில்லை.. தன் செல்வாக்கை நிரூபிக்க ஓபிஎஸ்சுக்கு ரூ.20கோடி வீணானதுதான் மிச்சம்.. போதாக்குறைக்கு, கு.ப.கிருஷ்ணன் - வைத்திலிங்கம் இருவருக்கும் இடையே ஈகோ வெடித்துள்ளதால், இவர்களை சமாளிக்க வேண்டிய நிலைமையில் ஓபிஎஸ் உள்ளார்" என்றும் சலசலப்புகள் கிளம்பின.

பூரித்த தொண்டர்கள்: அதேசமயம், ஓபிஎஸ்ஸுக்கு இந்த மாநாடு ஆகச்சிறந்த வெற்றி என்றே பூரித்தார்கள் அவரது தொண்டர்கள்.. காரணம், கடைசிவரை எவ்வளவோ முயற்சித்தும், இந்த மாநாட்டை எடப்பாடியால் தடுத்து நிறுத்த முடியவில்லை, எவ்வளவோ முட்டுக்கட்டைகள் போட்டும், மாநாட்டை தடுக்க முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.

கிட்டத்தட்ட இதே முட்டுக்கட்டை பாணியைதான், எடப்பாடி நடத்திய மாநாட்டுக்கும் ஓபிஎஸ் தரப்பில் போடப்பட்டது.. கோர்ட் வரை சென்று தடை கோரப்பட்டது.. டிஜிபியிடம் புகார் கொடுக்க மூத்த தலைவர் புகழேந்தி ஓடினார்.. ஆனாலும், மாநாடு வெற்றிகரமாக நடந்தது. இதனால், எடப்பாடியின் கிரேஸ் டெல்லியில் தற்போது கூடியுள்ளதாகவும் கருதப்படுகிறது. அதேசமயம், ஓபிஎஸ் + தினகரன் என்ன செய்ய போகிறார்கள் என்ற அடுத்த சந்தேகமும் கிளம்பி உள்ளது.

தினகரன் : இப்படிப்பட்ட சூழலில்தான், வரப்போகும் எம்பி தேர்தலில், ஓபிஎஸ்ஸையும், தினகரனையும் போட்டியிட வேண்டாம் என்று மேலிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் ஒன்று கிளம்பி உள்ளது.
டெல்லி பாஜகவை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனால்தான், அதிமுகவிடம் கூடுதலாக 2 சீட்கள் வாங்கி, டிடிவி தினகரனையும், ஓபிஎஸ் மகனையும், தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்கவும் பாஜக யோசனை செய்தது.. ஆனால், வழக்கம்போல், இந்த முடிவுக்கும் எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.

வெறும் ஆதரவு: அதனால்தான் வரும் எம்பி தேர்தலில் ஓபிஎஸ் + டிடிவி இருவரையும் போட்டியிட வேண்டாம் என்றும், அதிமுக பாஜக கூட்டணியை ஆதரியுங்கள் என்றும், அடுத்து நடக்க போகும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுங்கள் என்றும் சொல்லப்பட்டதாம்.. இதைக்கேட்டு 2 பேருமே அதிர்ச்சி அடைந்துவிட்டார்களாம்.. இவர்களை, இவர்களின் ஆதரவாளர்களும் தொண்டர்களும்தான் அதிர்ந்து போய் உள்ளதாக சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக, தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டால், எதிர்காலமே தங்கள் கட்சிக்கு பாதிக்கப்பட்டுவிடும் என்று 2 பேருமே நினைக்கிறார்கள். அதனால்தான்,

இது தொடர்பாக, 2 தரப்பிலுமே தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, நிர்வாகிகள் நிறைய விஷயங்களை, தங்கள் தலைமைக்கு எடுத்து சொன்னார்களாம்..

ஈரோடு: பாஜக சொன்னதால்தான் ஈரோடு தேர்தலிலும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது.. இப்போதும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டால், கட்சி தொண்டர்களிடம் சோர்வு மனப்பான்மை வந்துவிடும், இந்த சோர்வு, நடக்க போகும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்துவிடும். அதனால் யாருக்குமே கட்டுப்படாமல், தேர்தலில் போட்டியிட்டாக வேண்டும் என்று ஆதரவாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாம்.
எனினும், இதற்கு பாஜக என்ன செய்யபோகிறது? என்று தெரியவில்லை. ஆனால், தேர்தல் நெருங்கும் சூழலில் சில நெருக்கடிகள் வரலாம் என்கிறார்கள்.

டிடிவி கூட்டணி: இதற்கு நடுவில், நேற்றைய தினம் சேலத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், "வருகின்ற எம்பி தேர்தலில் கூட்டணி இல்லை என்றாலும் நாங்கள் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். ஒருவேளை கூட்டணி என்று இருந்தால் அது தேசிய கட்சியுடன் தான் இருக்கும்... தனித்து இருந்தால் நாங்கள் தான் தலைமை" என்று வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்.

பாஜக என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், "தேசிய கூட்டணி" என்று டிடிவி தினகரன் திரும்ப திரும்ப சொல்வதில், ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டி உள்ளது. அத்துடன் காங்கிரஸையும் இங்கு பொருத்தி பார்க்க வேண்டியதிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+