நாட்டுக்காக கலாம் கண்ட கனவுகளை நனவாக்குவோம்... டிடிவி தினகரன் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

ஆண்டுதோறும் அப்துல் கலாம் நினைவுதினமான ஜூலை 27-ம் தேதி ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும், இளைஞர்களும் நினைவஞ்சலி செலுத்துவார்கள். இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரியளவில் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு யாரும் செல்லவில்லை.

ttv dinakaran says, Lets make Kalams dreams come true for the country

அவரவர் இருக்கும் இடங்களில் இருந்தே அப்துல் கலாமை நினைவு கூறும் விதமாக அவரது பொன்மொழிகளையும், திருவுருவப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில்,

''இளைஞர்களின் இதய நாயகராக, இந்திய மக்களின் மனம் கவர்ந்த குடியரசுத்தலைவராக, எழுச்சி சிந்தனைகளை நம் மனதில் விதைத்தவராக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.''

''நாட்டுக்காக கலாம் அவர்கள் கண்ட கனவுகளை நனவாக்கிட அனைவரும் பாடுபடுவோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி அவரை நினைவு கூறும் வகையில் அவரது புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்துல் கலாமை முன் மாதிரியாக எடுத்துக்கொண்ட இளைஞர்கள் பலர் சமூக வலைதளப்பக்கங்களில் அவரது படத்தை முகப்பில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+