Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் களம் தகிக்கிறது, கூட்டணிக் கணக்குகள் எகிறுகிறது, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் 'தலைமை' மட்டும் இன்னும் கேட் தாண்டவில்லை என்பதுதான் இப்போதைய கோட்டை வட்டார ஹாட் டாக்.

தமிழக அரசியலில் 'என்ட்ரி' கொடுத்த வேகத்திலேயே லட்சக்கணக்கானோரைத் திரட்டி மாநாடு நடத்தி, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என இருதரப்பையும் அதிர வைத்தார் விஜய். ஆனால், அந்த வேகம் இப்போது எங்கே போனது என்பதுதான் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் டாப் நிர்வாகிகள் வரையிலான மில்லியன் டாலர் கேள்வி.

tamil nadu assembly elections 2026 dmk aiadmk

தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்து, களம் சூடுபிடித்த பிறகும் விஜய் தனது பனையூர் இல்லத்திலேயே முகாமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் அடுத்தகட்ட நகர்வு என்ன, வேட்பாளர் தேர்வு எப்படி, தொகுதிப் பங்கீடு யாரிடம் என்பது குறித்து எந்தவொரு தெளிவான அறிவிப்பும் வராததால், முக்கியப் பொறுப்பிலுள்ள நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

"நாங்க களத்துல வேலை செய்யத் தயாரா இருக்கோம். ஆனா, கேப்டன் ஷிப்புக்குள்ளேயே இருந்தா நாங்க எப்படித் துடுப்பு போடுறது?" எனத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் சில மாவட்டச் செயலாளர்கள். குறிப்பாக, மற்ற கட்சிகள் சுவர் விளம்பரம், திண்ணைப் பிரச்சாரம் என இறங்கிவிட்ட நிலையில், தவெக தரப்பில் இன்னும் ஒரு சுவரொட்டி கூட முழுமையாக ஒட்டப்படவில்லை என்பது நிர்வாகிகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிர்வாகிகள் தரப்பில் எழும் புகார்கள்:

கம்யூனிகேஷன் கேப்: தலைமைக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் இடையே முறையான தகவல் தொடர்பு இல்லை.

ஆலோசனைக் கூட்டம்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் இன்னும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

தாமதமான வியூகம்: களத்தில் மற்ற கட்சிகள் முன்னிலை பெற்றுவிடக்கூடாது என்கிற அச்சம்.

விஜய் தரப்போ, "எல்லாவற்றுக்கும் ஒரு திட்டம் இருக்கிறது. சரியான நேரத்தில் 'வெளியே' வருவார்" என அமைதி காக்கிறார்கள். எது எப்படியோ, 'விஜய்' வெளியே வந்து கொடியை அசைத்தால் மட்டுமே தவெக தொண்டர்களிடையே உற்சாகம் பிறக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.

பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அந்த நொடியில் இருந்தே 'தேர்தல் நடத்தை விதிமுறைகள்' (Model Code of Conduct - MCC) அமலுக்கு வரும். 'அப்படினா என்ன? இனி என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?' - ஒரு குயிக் லுக்!

1. நடத்தை விதிகள் என்றால் என்ன?

தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதையும், ஆளும் கட்சிகள் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளே இந்த MCC. இது இன்று மாலை தொடங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும்.

2. ஆளும் கட்சி மற்றும் அமைச்சர்களுக்குப் பூட்டு!

புதிய திட்டங்கள் கிடையாது: இன்று மாலைக்கு மேல் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அடிக்கல் நாட்டு விழா, புதிய சாலைத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என எதுவுமே இனி 'நோ நோ' தான்.

அரசு இயந்திரம்: அரசு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அரசு அலுவலகங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது.

விளம்பரங்கள்: அரசு செலவில் சாதனைகளை விளக்கிச் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படும். ஏற்கனவே உள்ள அரசு விளம்பரங்கள், பேனர்கள் உடனடியாக அகற்றப்படும்.

3. அரசியல் கட்சிகள் கவனிக்க வேண்டியவை:

விமர்சனங்கள்: எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்பத்தைப் பற்றி விமர்சிப்பது விதிகளுக்கு எதிரானது.

மத உணர்வுகள்: ஜாதி, மதம் அல்லது மொழி உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுவதோ, வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதோ கடும் நடவடிக்கைக்கும், தகுதி நீக்கத்திற்கும் வழிவகுக்கும்.

அனுமதி கட்டாயம்: பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அந்தந்தப் பகுதி காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

4. பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

பணப் புழக்கம்: 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கொண்டு சென்றால் முறையான ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும். இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

புகார் அளிக்க 'C-Vigil': உங்கள் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாலோ அல்லது விதிமீறல்கள் நடந்தாலோ 'cVIGIL' ஆப் மூலம் நேரடியாகப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துப் புகார் அளிக்கலாம். 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+