வெளியே வராத விஜய்.. உடைத்து பேசவும் மறுப்பு.. ஸ்டன் ஆகி நிற்கிறாராமே.. அப்படி என்ன நடந்தது? பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் விவகாரத்திற்கு பின் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முழுக்க முழுக்க அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கட்சி ரீதியிலான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் அவர் ஒதுங்கியே இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்திய கரூர் சர்ச்சைக்குப் பிறகு, தமிழக வெற்றி கழகம் (TVK) ஒரு தீவிரமான உள் நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய், தீவிர அரசியல் விவாதங்களில் இருந்து முழுமையாக விலகியிருப்பதாக கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது கட்சியின் அன்றாட விவகாரங்களிலிருந்தும் முக்கிய முடிவெடுக்கும் செயல்முறைகளிலிருந்தும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

TVK Vijay

தமிழக வெற்றி கழகம்

உள் வட்டாரங்களின்படி, விஜய் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து விலகியிருக்கிறார். தனது நெருங்கிய ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியைத் தவிர வேறு யாரையும் சந்திக்காமல், தனது பெரும்பாலான நேரத்தை தனிப்பட்ட முறையில் செலவிடுகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த அதிகரித்து வரும் தனிமைப்படுத்தல், TVK அமைப்புக்குள் ஒரு பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜான் மட்டுமே விஜயிடம் பேசும் ஒரே நபர் என்றும், மற்ற மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு சக்தியற்றவர்களாகி விட்டனர் என்றும் கட்சியில் பலரும் நம்புகின்றனர். முக்கியமாக் கரூர் விவகாரம் விஜயை முடக்கிவிட்டது. அதனால்தான் அவர் கரூர் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

கரூர் செல்லாத விஜய்

விஜய் கரூருக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் செல்வதில் விஜய் இப்போதைக்கு ஆர்வம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு போக வேண்டாம். அங்கே மண்டபம் கிடைக்கிறது.. கிடைக்காமல் போவது பிரச்சனை இல்லை. கரூர் செல்வது இப்போதைக்கு சரியாக இருக்காது.

கொஞ்சம் யோசித்துவிட்டு கரூர் செல்லலாம். நான் போனால் சரியாக இருக்காது. என்னிடம் யாராவது நேரடியாக கேள்விகளை கேட்டால் சரியாக இருக்காது. சிலர் சட்டென கோபப்பட்டால் பிரச்சனை ஆகிவிடும் . அதனால் நாம் யோசித்து செல்லலாம். முதலில் இரண்டாம் கட்ட தலைவர்கள் போகட்டும்.. அவர்கள் போய்விட்டு வந்த பின் நாம் போவதை பற்றி யோசிக்கலாம் என்று விஜய் கூறியதாக தெரிகிறது. விஜயின் இந்த நிலைப்பாடு தவெக நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்க்கு நெருக்கடி

கரூர் விவகாரம் தற்போது ஒரு முழுமையான தலைமை நெருக்கடியாக மாறியுள்ளது. பல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இரண்டாம் நிலை தலைவர்கள் விரக்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் அவர்களுக்கு மேலிடத்திலிருந்து தெளிவான வழிகாட்டுதல்கள் கிடைக்கவில்லை. கூட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன, மேலும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், உள்ளூர் பிரச்சாரங்கள் அல்லது வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் என எதுவாக இருந்தாலும், கட்சியின் எதிர்கால நகர்வுகளுக்கு எந்தவிதமான திட்டமும் இல்லை.

விஜய்யின் திடீர் மௌனம் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். உட்கட்சி மோதல்கள் குறித்த தகவல்கள் பொதுவெளியில் வெளியான பிறகு, அவர் கடுமையான நடவடிக்கை எடுத்து கட்சியை மறுசீரமைப்பார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் விஜய் அப்படி ஆக்சன் எதையும் எடுக்கவில்லை.

கட்சி ரீதியிலான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் அவர் ஒதுங்கியே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் மீது டாப் நிர்வாகிகள் பலரும் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+