5 மாவட்டங்கள்.. 30 தொகுதிகள்.. நாளை கல்வி விருது வழங்கும் விழா.. மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களை பெறும் மாணவ- மாணவிகளுக்கு விருதும், ஊக்க தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு நாளைய தினம் முதற்கட்ட உதவி தொகை வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் 30 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் விஜய் பரிசுகளை வழங்கவுள்ளார்.

தவெக சார்பில் கடந்த 2023ம் ஆண்டு முதல் தொகுதி வாரியாக டாப் மதிப்பெண்களை பெறும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகளை நேரில் சந்தித்து சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

TVK Kalvi viruthu vizha Vijay TVK

ஊக்கத்தொகை

நடப்பாண்டில் தவெக வென்று ஆட்சியை பிடித்துவிட்ட நிலையில், இந்த உதவி தொகை விழா குறித்து எந்தவொரு அறிவிப்பும் வராமல் இருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பவும் ஆரம்பித்தனர். இந்த சூழலில் தான் நாளை தினம் விருது வழங்கும் விழாவின் முதற்கட்ட நிகழ்வு நடக்கும் என்றும் அதில் 5 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகையை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருது வழங்கும் விழா

இது அமைச்சரும் தவெக பொதுச் செயலாளருமான ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை நேரில் அழைத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு முதல் கட்டமாக நாளை (04.11.2026, புதன்கிழமை), சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நாளை அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து 30 தொகுிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

காலை 11 மணி

இந்த தொகுதிகளை சேர்ந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் நாளை காலை 11.00 மணிக்கு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. பின்னர் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட இருக்கிறது என்று தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும், "எதிர்காலச் சமுதாயம் வளமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனிக் கவனம் செலுத்திச் செயலாற்றி வருகிறார்.

முதல்வர் விஜய்

நாளை மதியம் 2.00 மணி அளவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு மாணவச் செல்வங்களுக்கு, அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி, வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+