இடைத்தேர்தல்களின் போது முன்னாள் முதல்வர்கள் என்ன செய்தார்களோ! அதைதான் விஜய் செய்தார்! அமைச்சர் பதில்
திருவாரூர்: இடைத்தேர்தல்களின் போது முன்னாள் முதல்வர்கள் யாருமே நலத்திட்ட உதவிகளை வழங்கியதே இல்லையா, விஜய்க்கு மட்டும் ஏன் இந்த விமர்சனம்? என உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்சியில் 1771 பயனாளிகளுக்கு 1226.08 லட்டசம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வவநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு 50% வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 50 சதவீதம் வழங்கப்படும். இதற்கு முன்னால் இருந்த ஆளுநர்
யுஜிசி நாமினி நியமனம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கைதான் பரிசீலனையில் இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், தற்போதைய ஆளுநர் அர்லேக்கரை நானும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தோம்.
விரிவான ஆலோசனை இது தொடர்பாக நடைபெற்றுள்ளது. தீபாவளிக்கு முன் நல்ல செய்தியை ஆளுநர் அலுவலகம் வெளியிடும் நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கிறோம். 9000 பேருக்கு பணி நியமனம் வழங்குவது தொடர்பாக பிரத்யேக தேர்வினை நடத்த திட்டமிட்டு அதன்படி முதல் கட்டமாக 2700 பணியிடங்களுக்கு அந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
இதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நடந்த பின்னர், 6000 பேராசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனை இரண்டு ஆண்டுகளுக்குள் முறைப்படுத்துவோம் என சட்டமன்றத்திலேயே நான் தெரிவித்துள்ளேன்.
சன்னரக அரிசி விரைவாக டெல்டா மாவட்டங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . புதுக்கோட்டை, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல்வர் விஜய் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தந்ததே இடைத்தேர்தலையொட்டிதான் என எழும் விமர்சனங்கள் குறித்து பதில் அளித்த அமைச்சர், கடந்த காலங்களிலும் இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
அப்போதும் முன்னாள் முதல்வர்கள் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார்கள். அதுபோலத்தான் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் விஜய் வந்துள்ளார் என்றுதான் அவரது வருகையை பார்க்க வேண்டும். முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்குவது பெருமைக்குரிய விஷயம் என தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications
