Vellore: 3 மணி நேரத்திற்கு இருளில் மூழ்கிய வேலூர் ஆட்சியர் அலுவலகம்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மின் ஒயர்கள் மீண்டும் எரிந்ததால் 3 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் ஆட்சியர் அலுவலகம் இருளில் மூழ்கியது.

வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடிக்கடி மின் ஒயர்கள் தீப்பற்றி எரிகிறது.

Vellore Collectorate

இதனை முழுமையாக சீரமைக்காததால் அடிக்கடி இது போன்று மின் ஒயர்கள் எரிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் இருளில் மூழ்கியது.

புகைமூட்டம் வந்ததால் மின் சர்க்யூட் ஒயர் எரிந்ததை தீயணைப்பானை கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் அணைத்தனர்.

இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருளில் மூழ்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அடிக்கடி மின் ஒயர்கள் தீப்பற்றி எரிவதும் ஆட்சியர் அலுவலகம் இருளில் மூழ்குவதும் தொடர்கதையாகியுள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்த காலத்திலிருந்தே மின்வெட்டு இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் ஆலைகள் இயக்குவதில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு சாலைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதெல்லாம் அரசின் கவனத்திற்கு சென்றாலும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில் அங்கும் இங்கும் என எங்காவது மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+