ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வேல்முருகன் கைது.. ஒரு கீறல் என்றாலும் விடமாட்டோம்.. கொதிப்பு!
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செயப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட மறுத்து வரும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று சென்னையில் பேரணி நடைபெற்றது.

காவிரி எங்கள் உரிமை என்ற முழக்கத்தை முன் வைத்தும், தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் கன்னட அமைப்புகள் அவமதித்ததை கண்டித்தும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் பேரணியை மேற்கொண்டு, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய வேல்முருகன், "தமிழர்களுக்கு விரோதம் செய்யும் கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு ஆதரவு வழங்குகிறது. அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவமதிப்பு செய்கின்றனர். கர்நாடக மண்ணில் தமிழர்களுக்கு சிறு கீறல் ஏற்பட்டாலும், அதை நாங்கள் விடமாட்டோம்." எனத் தெரித்துள்ளார்.
இதற்கிடையே, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவாக தலைவர் வேல்முருகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications