“பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு”.. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் மாற்றி எழுதிய விஜய்!
சென்னை: தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு, தவெகவுக்கு அழைப்பு விடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்றத் தேர்தலை நடத்தும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி என்பதற்கு பதிலாக உள்ளாட்சி தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையர் என்று குறிப்பிட்டு விஜய் கடிதம் எழுதியுள்ளது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில், "தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில், ஜனநாயக செயல்முறையை மேம்படுத்துவதற்கு எங்கள் கட்சி உறுதியாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது.

தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் அமைப்பில் முக்கிய பங்குதாரர். பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவிற்கும் அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், மாநில தேர்தல் ஆணையர் நடத்திய கூட்டத்திற்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சமத்துவத்தையும், ஜனநாயக சமநிலையையும் பாதிக்கும் வகையில் இந்த செயல்பாடு உள்ளது.
தேர்தல் செயல்முறைகள் முழுமையாக, வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றால், தவெக-வையும் அடுத்தடுத்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அழைக்க வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு குடிமகனின் குரலையும் தவெக பதிவு செய்ய விரும்புகிறது. தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தவெக தயாராக இருக்கிறது.
தமிழக மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக முதன்மை தேர்தல் அதிகாரிக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு நடத்தப்படும் அரசியல் கட்சிகளுடனான அனைத்து ஆலோசனை கூட்டங்களிலும் தவெக சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்" என்று அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்.
https://tamil.oneindia.com/news/chennai/tvk-president-vijay-letter-to-ec-sparks-controversy-over-procedural-error-750805.htmlSIR தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் தவெக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களில் தங்கள் கட்சிக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதற்கு பதிலாக மாநில தேர்தல் ஆணையர் என்று குறிப்பிட்டு, மாநில தேர்தல் ஆணைய அலுவலக முகவரியைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி இருக்கிறார் தவெக தலைவர் விஜய். இது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
மாநில தேர்தல் அதிகாரி - சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்தக் கூடியவர். மாநில தேர்தல் ஆணையர்- உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களை நடத்தக்கூடிய அதிகாரம் படைத்தவர். மாநில தேர்தல் அதிகாரி அலுவலகம், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ளது. இதில் தவெக தலைவர் விஜய் குழம்பிப்போய் கடிதம் எழுதி இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதேசமயம், தவெக தரப்பு இதற்கு விளக்கம் அளித்திருக்கிறது,. அதில்,SIR நடவடிக்கை சார்ந்த விஷயத்தில் மட்டும் தவெக அழைக்கப்பட வேண்டும் என்று விஜய் கடிதம் எழுதவில்லை. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சிகள் என எந்த ஒரு தேர்தல் சம்பந்தப்பட்ட கூட்டத்திற்கும் தவெகவை தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் Article 324யை பயன்படுத்தி அழைக்கவேண்டும் என்று தான் தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
இரண்டு நபர்களுக்கும் சேர்த்து கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஆணையத்துக்கு கீழ்தான் அதிகாரி வருவார், அதனால் கடிதம் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அதிகாரிக்கும் கடிதம் போகும் என தவெகவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications