எந்த சைக்கிளில் போனார் ஆதவ்.. எப்போ போஸ்டர் ஒட்டுனாரு நிர்மல்! கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்.. பரபர!
சென்னை: விசிகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து வெளியேறிய சிடிஆர் நிர்மல் குமார், பிரபல யூட்யூபரும் பேச்சாளருமான ராஜ்மோகன் ஆகியோருக்கு கட்சியில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில பதவி வழங்கப்பட்டிருக்கிறது. சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டிய தொண்டர்களுக்கு தான் பதவி வழங்க வேண்டும் என தலைவர் விஜய் அறிவுறுத்தியிருக்கிறார் என புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்த நிலையில் மாநில பொறுப்பில் இருக்கும் அவர் உட்பட யாருமே ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்கள் இல்லை என புலம்புகின்றனர் உண்மையான விஜய் ரசிகர்களாக இருந்து தொண்டர்களாக மாறியவர்கள்.
தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் வசூல் நாயகனாக இருப்பவர் விஜய். அவர் நடிப்பில் படங்கள் வெளியானாலே
குறைந்தபட்சம் 200 கோடி ரூபாயை வசூலை தொடும் என்பதால் மினிமம் கேரண்டி விஜய் என அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகி அரசியலில் குதிக்கப் போவதாக அறிவித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் விஜய் அதுதான் தனது கடைசி படம் என அறிவித்திருக்கிறார்.
இதனால் அவரது திரைத்துறை ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், அவரது அரசியல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாநில மாநாடு என பிசியாக இருந்த விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்.
மூன்று கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து அவர்களை நேரில் சந்தித்து கள அரசியல் செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகள் தனியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா, பாஜக அதிமுகவிலிருந்து வெளியேறி தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கும் சிடிஆர் நிர்மல் குமார், பிரபல பேச்சாளரான ராஜ்மோகன் ஆகியோருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது.
கட்சியில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் பதவியும், சிடிஆர் நிர்மல் குமாருக்கு இணை பொது செயலாளர் பதவியும். ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். கட்சிக்காக பதவி வழங்கப்பட்டிருந்தாலும் ரசிகர் மன்றத்தில் இருந்து பல ஆண்டுகளாக மாநில நிர்வாகிகளாக பலர் உழைத்திருக்கின்றனர்.
விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் தற்போது கட்சியை விட்டு துரத்தப்பட்டு இருக்கின்றனர். தற்போது மாநில பொறுப்பில் இருக்கும் ஒருவர் கூட ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள் கிடையாது. புஸ்ஸி ஆனந்த் கூட விஜய் மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டதற்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் தான் விஜய் உடன் கைகோர்த்தவர். மேலும் பொருளளர் உள்ளிட்ட பலரும் ரசிகர் மன்றத்திற்கு தொடர்பே இல்லாதவர்கள் என்கின்றனர்.
மாவட்ட அளவிலான பதவிகளுக்கு மட்டுமே ரசிகர் மன்றத்தினர் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இதுவரையிலான மாநில பொறுப்புகளில் ஒருவர் கூட ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புஸ்ஸி ஆனந்த் கட்சியில் சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு பதவி வழங்க வேண்டும் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களை அரவணைத்து செல்லலாம் என பேசி இருந்தார்.
தற்போது கட்சியில் சேர்ந்த உடனையே மாநில பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் எந்த சைக்கிளில் சென்று எப்போது போஸ்டர் ஒட்டினர் என சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம்












Click it and Unblock the Notifications