சதி பண்ணிட்டாங்க! ஆட்சி அமைக்கும் முடிவை கைவிட்ட விஜய்? இரவோடு இரவாக எடுத்த முடிவு.. சொன்னது என்ன?
சென்னை: தனிப்பெரும் கட்சியாக ஜெயித்தும் ஆட்சி அமைக்க முடியாத நெருக்கடியை சந்தித்து வருகிறார் தவெக தலைவர் விஜய். ஆட்சி அமைக்க உரிமை கோரி, தமிழக பொறுப்பு கவர்னரை இரண்டு முறை சந்தித்தும் விவாதித்தும் கவர்னரின் நம்பிக்கையைப் பெற விஜய்யால் முடியவில்லை. விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல், பெரும் பான்மை எண்ணிக்கையைக் கேட்டு விஜய்யின் உரிமையை நிராகரி த்தபடி இருக்கிறார் கவர்னர் அர்லேக்கர்.
இதனால், மிகவும் அப்-செட் மூடில் இருக்கும் விஜய், நேற்று இரவு ஜான் ஆரோக்கியசாமி, புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன் ஆதவ் அர்ஜுனா, அருண்ராய் உள்ளிட்ட பெருந்தலைகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

சதி செய்கிறார்கள்
அப்போது, பாஜக, திமுக, அதிமுக மூன்றுபேரும் சேர்ந்து நமக்கு எதிராக சதி செய்கிறார்கள். ஆட்சி அமைக்கிற முயற்சியை இனி எடுக்க வேண்டாம். யாரால் ஆட்சி அமைக்க முடியுமோ அவங்க ஆட்சி அமைச்சுக்கட்டும். இல்லை, கவர்னர் ரூல் வந்தாலும் சரி, மறு தேர்தல் வந்தாலும் சரி... எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம். தைரியம் இருந்தா மறு தேர்தல் நடத்தட்டும். பார்த்துக்கலாம். ஜனநாயகம் ஜனநாயகம்னு வாய்கிழிய பேசுற ஸ்டாலின் சார்... கவர்னரரின் நடவடிக்கையை கேள்விக்கேட்டாரா? விஜய் ஆட்சி அமைக்க இடையூறாக இருக்க மாட்டோம்னு அவசரம் அவசரமா பேட்டி கொடுக்கிறாரு. மாட்டோம்னு சொன்னா செய்வோம்னு அர்த்தம். திமுக கலாச்சாரம் அதானே? என்று விரக்தியின் உச்சத்தில் இருந்து தனது உணர்வுகளைக் கொட்டியிருக்கிறார் விஜய்.
விரக்தியின் உச்சத்தில் விஜய்
அவரை சமாதானப்படுத்திய பெருந்தலைகள், நடக்கிற அண்டர் டீலிங்கை பார்த்தால், நம்மை ஆட்சி அமைக்க விடமாட்டாங்கன்னு தான் தோணுது. பெரும்பான்மை எண்ணிக்கையை கவர்னரிடம் காட்டணும் என்றோ, காட்டத் தேவையில்லை என்றோ கவர்னருக்கான அதிகாரத்தில் சொல்லப்பட்டும், கவர்னர் நம்மிடம் அடம் பிடிக்கிறார்னா டெல்லியின் சதியும் இதுல இருக்கு. சுப்ரீம் கோர்ட் லாயர்களிடம் விசாரிச்சப்ப... கவர்னர் நினைச்சா உங்களுக்கு பதவி பிரமானம் செய்து வைக்க முடியும். ஆனா, அவருக்கு திருப்தி ஏற்படனும் என லாயர்ஸ் சொல்றாங்க. அப்படின்னா, நம்பிக்கை-திருப்தி என்கிற வார்த்தைகளை வெச்சு விளையாட்டுக் கட்டுறாங்க என்று ஆதங்கப்பட்டு பேசியதுடன், கம்யூனிஸ்டுகளும் விசிகவும் பெரும் நம்பிக்கையை நமக்கு கொடுத்திருந்தாங்க. ஆனா, எஸ் ஆர் நோ சொல்றதுக்கூட ரொம்ப இழுக்கிறாங்க.
அரசியல்ல நம்பிக்கைக்கு இடம் கிடையாது போல! என்று ஆதவ் அர்ஜுனா சொல்ல, குறுக்கிட்ட அருண்ராய், அந்த விசிகவும் இடது சாரிகளும் நம்மை ஆதரிக்க ரெடியாய்ட்டாங்க. இத தெரிஞ்சிக்கிட்ட ஸ்டாலின், அவங்களை கூப்பிட்டு பேசியதும் தான் அவங்க மனசு மாறியிருக்கு. அவங்களை நான் சந்திச்சப்ப... இதை ஓப்பனாகவே நம்மக்கிட்ட சொன்னாங்க. இருந்தாலும் அவங்க முடிவை உறுதியா சொல்றது வரை காத்திருக் கலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படிப்பட்ட விவாதங்கள் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில், ஆரம்பத்தில் விஜய் என்ன சொன்னாரோ அதையே மீண்டும் சொன்ன அவர், இனியும் முயற்சிக்கிறது வேஸ்ட்; மக்களிடம் மீண்டும் நீதி கேட்போம் என்று விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரை சமாதானப்படுத்திய பெருந்தலைகள், நாட்கள் நகர்ந்து விடவில்லை. சட்டரீதியாக முயற்சிப்போம். நம்முடைய எதிரிகள் என்ன மூவ் செய்கிறார்கள்னு பார்க்கலாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் விஜய் அப்-செட் மூடிலேயே இருந்துள்ளார் என்கி றார்கள் விபரம் அறிந்த தவெக தரப்பினர்.












Click it and Unblock the Notifications