ஒன்றல்ல.. இரண்டு தொகுதி.. விஜய் டிக் அடித்த கடலோர & தென் மாவட்டம்.. எங்கே போட்டியிடுகிறார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலில், TVK தலைவர் விஜய் 2026 மாநிலத் தேர்தலில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக யூகங்கள் வலுத்து வருகின்றன. கட்சி வட்டாரங்களின் தகவல்படி, இது தொடர்பாக கட்சிக்குள் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு தொகுதி கடற்கரைப் பகுதியிலிருந்தும், மற்றொன்று தென் மண்டலத்திலிருந்தும் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தத் தகவல் உறுதியானால், அது மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படும்.

vijay tamilaga vetri kazhagam

இரண்டு இடங்களில் போட்டியிடும் தவெக விஜய்

தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் இரண்டு இடங்களில் இந்த முறை போட்டியிடுவார் என்று செய்திகள் வருகின்றன.

இது தொடர்பாக இணையத்தில் பிரபல PROக்கள் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றன. 2026 சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனைகளை விஜய் தொடங்கி விட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன் விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர் தவெகவுக்கு 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முறையாக திட்டமிட்டு வேலைகளை செய்தால் இதை உயர்த்தலாம். விஜயை சந்தித்த பிரசாந்த் கிஷோர்.. தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சேர்த்து மொத்தமாக 60-70% உள்ளது.

ஆனால் விஜய் இதை 60%க்கும் கீழ் கொண்டு வருவார். விஜயின் கட்சிக்கு மட்டுமே அதிமுக - திமுகவின் கூட்டு வாக்கு வங்கியை உடைக்கும் சக்தி உள்ளது என்று பிகே கூறி உள்ளாராம். முறையாக வேலைகளை செய்தால் திட்டமிட்டபடி 20 சதவீதம் வரை வாக்கு வங்கி வாங்கலாம். தீவிரமாக பணிகளை செய்தால் அதைவிட கூடுதலாக வாக்கு வங்கி வாங்கலாம் என்று ஆலோசனை வழங்கி உள்ளாராம்.

விஜய் போட்டியிட போகும் தொகுதி

இப்படிப்பட்ட நிலையில்தான் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் போட்டியிட போகும் தொகுதி தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இணையத்தில் பிரபல PROக்கள் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழக கட்சியின் மீட்டிங்கில் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி விஜய் போட்டியிட சாதகமான தொகுதியை சர்வே எடுக்கும்படி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். தற்போதைய நிலவரப்படி நாகப்பட்டினத்தில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

கடலோர மாவட்டமான நாகப்பட்டினம் ஒருவேளை தேர்வாகாத பட்சத்தில் தருமபுரியில் போட்டியிடுவது பற்றியும் அவர் ஆலோசனை செய்துள்ளாராம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னொன்று தென் மாவட்டத்தில் ஒரு தொகுதி என்று கூறப்படுகிறது.

நாகப்பட்டினம்தான் விஜயின் முதல் தேர்வாக இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. தென் மாவட்டத்தில் உள்ளது இரண்டாவது தேர்வாக இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதன் முக்கிய நோக்கம், வெவ்வேறு பகுதிகளில் கட்சியின் செல்வாக்கை அதிகரிப்பதாகும். கடற்கரைப் பகுதிகளில் மீனவ சமூகங்கள், நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகள் உள்ளன. இங்கு புயல் நிவாரணம், வாழ்வாதாரப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு போன்ற பிரச்சினைகள் முக்கியமானவை. மறுபுறம், தென் மண்டலம் தமிழ்நாட்டின் மிகவும் அரசியல் செல்வாக்கு மிக்க மண்டலங்களில் ஒன்றாகும். இங்கு வலிமையான வணிக சமூகங்கள், சாதி அமைப்புகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான படித்த இளைஞர்கள் உள்ளனர்.

தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவது, மாநிலத்தில் ஒரு முக்கிய சக்தியாக உருவாக விரும்பும் எந்தவொரு கட்சிக்கும் முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. விஜய் இந்த இரண்டு பகுதிகளையும் தேர்வு செய்வது, கட்சியின் எதிர்காலத்திற்கு உதவும் என்று அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+