Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓ இதுக்குத்தான் அவ்வளவு பெரிய ஐடி விங் அலுவலகமா? தவெக பேரணி போராட்டம்.. சம்பவம் செய்த வார் ரூம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக #DMKSocialinjusticeGovt டிரெண்ட் செய்யப்படுகிறது. இன்று நடக்கும் தவெக போராட்டத்தை தொடர்ந்து #DMKSocialinjusticeGovt டிரெண்டிங் செய்யப்படுகிறது. கஸ்டடி மரணங்களுக்கு எதிராக தவெக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்யப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தை திறந்து உள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் மிகப்பெரிய அளவில் ஐடி விங்கிற்காக அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது.

Sivagangai

இதில் விஜய் முதல்வராக போகும் தேதி என்று குறிப்பிட்டு உத்தேச கவுண்டிங் ஓடிக்கொண்டு இருக்கிறது. tvk_cardiffsaravanan என்ற இன்ஸ்டாகிராம் ஐடி இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தைத் திறந்துள்ளார். இதற்காகச் சென்னை தேனாம்பேட்டையில் பிரம்மாண்டமான அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

நடைபயணம் மற்றும் தேர்தல் பணிகளைக் கவனிக்கும் விதமாக மிகப்பெரிய ஐடி விங் அலுவலகத்தைத் திறக்க விஜய் முடிவு செய்துள்ளார். தேனாம்பேட்டையில் அலுவலகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே அலங்காரப் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

வார் ரூம்

இந்த வார் ரூம் திறக்கப்பட்ட நிலையில் தற்போது திமுக அரசுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக #DMKSocialinjusticeGovt டிரெண்ட் செய்யப்படுகிறது. இன்று நடக்கும் தவெக போராட்டத்தை தொடர்ந்து #DMKSocialinjusticeGovt டிரெண்டிங் செய்யப்படுகிறது. கஸ்டடி மரணங்களுக்கு எதிராக தவெக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்யப்படுகிறது.

சென்னை சிவானந்தா சாலையில் இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் பேரணி நடத்தப்படுகிறது. மொத்தமாக 16 நிபந்தனைகளுடன் பேரணிக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் பேர் பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர். அஜித் குமார் மறைவிற்கு நீதி வேண்டி பேரணி நடத்த உள்ளார் விஜய். ஏற்கனவே லாக் அப் மரணங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பங்கேற்க உள்ளன.

ஏற்கனவே சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கினை சிபிஐக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. . கைது செய்யப்பட்ட காவலர்கள் 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் மரண வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டம் செய்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதன் அடிப்படையில் 5 போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இதே விவகாரத்தில் விஜய் தரப்பு பேரணி செல்ல உள்ளது. இந்த நிலையில் இன்று தவெக நடத்தும் இந்தப் பேரணியையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நிர்வாகிகள் கைது

தவெக போராட்டம் இன்று காலை 10 மணிக்கு நடக்கும் நிலையில் விதியை மீறிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். வேறு மாவட்டங்களில் இருந்து போராட வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னையை சேர்ந்த தவெக தொண்டர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமென விதி உள்ளது. ஆனால் அதை மீறி வேலூர், காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இன்று நடக்கும் போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் நிபந்தனையை மீறி வெளி மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட தொண்டர்களை கைது செய்து நடவடிக்கை நடந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+