உங்க ஆட்சி எதுக்கு சார்.. சாரி மட்டும்தான் கேட்க தெரியும்.. ஸ்டாலின் மீது விஜய் சரமாரி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் குமார் விவகாரத்தில் ஏற்கனவே சாரி சொல்லிட்டீங்க, இப்போது 24 பேரின் குடும்பத்துக்கும் சாரி சொல்லிடுங்க, உங்க ஆட்சி எதுக்கு சார்? சிஎம் பதவி எதுக்கு சார்? உங்களிடம் பதில் இருக்காது- நீங்கள் சாரிதான் சொல்வீர்கள், என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசி உள்ளார்.

விஜய் தனது பேச்சில், மடப்புரம் அஜித் குமார் எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். சாதாரண குடும்பத்திற்கு நடத்த கொடுமைக்கு நீதி வேண்டும். ஏற்கனவே சாரி சொல்லிட்டீங்க - 24 பேரின் குடும்பத்துக்கும் சாரி சொல்லிடுங்க. அஜித் குமார் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்தது போல இங்கேயும் கொடுங்கள். சாத்தான்குளம் மரணத்தை விமர்சனம் செய்தீர்களே.. இப்போது நீங்கள் செய்வது என்ன சார்?

Sivagangai

அதே ஆர்எஸ்எஸ் உடன் கைகோர்த்து இருக்கும் சிபிஐ கிட்ட போய் ஏன் ஒளிஞ்சுக்கிட்டீங்க? ஏன் எஸ்ஐடி அமைக்கவில்லை?. ஒன்றிய அரசின் ஆட்சிக்கு பின் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள். உங்களை நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கணும்னா நீங்க எதுக்கு சார்?. உங்க ஆட்சி எதுக்கு சார்? சிஎம் பதவி எதுக்கு சார்?

உங்களிடம் பதில் இருக்காது- நீங்கள் சாரிதான் சொல்வீர்கள். நீங்கள் சாரி மட்டும்தான் சொல்ல முடியும்.. உங்களால் வேறு என்ன சொல்ல முடியும்.. உங்கள் ஆட்சி சாரி மாடல் ஆட்சியாக மாறிவிட்டது., என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசி உள்ளார்.

விஜய் பேரணி

சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக 16 நிபந்தனைகளுடன் பேரணிக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். இந்த பேரணியில் கஸ்டடி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் மேடை ஏற்றினார். மேடையிலேயே தமிழக அரசுக்கும், கஸ்டடி மரணங்களுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சுமார் 5 ஆயிரம் பேர் பேரணியில் கலந்து கொண்டு உள்ளனர். அஜித் குமார் மறைவிற்கு நீதி வேண்டி பேரணி நடத்த உள்ளார் விஜய். ஏற்கனவே லாக் அப் மரணங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பங்கேற்று வருகின்றன.

இந்தப் பேரணியையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் தனிப்படை போலீசாரால் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக போராட்டம் நடத்த அனுமதி கோரிய நாளில் அந்த இடம் வேறு காரணத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால், ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கோரிய நிலையில், அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் சென்னை கமிஷனர் அருண் இதை மறுத்து இருந்தார் .

இதையடுத்து, சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரை அனுமதி அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு அளித்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில், நீதிபதி வேல்முருகன் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தவெக போராட்டத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று தவெக மூலம் மிகப்பெரிய பேரணி சென்னை சிவானந்தா சாலையில் நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+