1000 யுவராஜ்.. சர்ச்சையை கிளப்பிய பாஜக கட்டெறும்பை தூக்கிய போலீஸ்.. மன்னிப்பு கடிதம்? நடந்தது என்ன?
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட யுவராஜ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த கட்டெறும்பு என்னும் இசக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் கோகுல். கல்லூரி படித்து வந்த இவர் நாமக்கல் மாவட்டத்தில் இருந்த மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.இந்த நிலையில் 2015ம் ஆண்டு இவர் தொட்டி பாளையம் அருகே இருக்கும் ரயில் தண்டவாளம் ஒன்றில் கொல்லப்பட்டு கிடந்தார். இந்த மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்த கொலையில் யுவராஜுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையிலும், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையிலும் இவரை கைது செய்தனர். சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர்தான் யுவராஜ். இவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நாமக்கல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
அதன்பின் இந்த வழக்கில் மேலும் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த வருடம் மார்ச் 5ம் தேதி யுவராஜ் மற்றும் 9 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரது அருண் (கார் ஓட்டுனர்) சகோதரர்கள் குமார், சதிஷ் ஆகியோரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மார்ச் 8ம் தேதி காலை தண்டனை விவரங்கள் வெளியானது.
ஆயுள் தண்டனை: அதில் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள் தண்டனை அதாவது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத் குமார் தீர்ப்பு வழங்கினார். இரண்டாவது குற்றவாளி அருணுக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரபு, கிரிதர் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆண்டு கூடுதல் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து யுவராஜ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் 10 பேர் மீதான தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. மற்றும் 5 பேர் விடுதலையை எதிர்த்து கோகுலராஜ் தாயார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளனர்.
கைது: இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட யுவராஜ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த கட்டெறும்பு என்னும் இசக்கி கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளே ஒரு யுவராஜ் இருக்கலாம்.. ஆனால் வெளியே ஆயிரம் யுவராஜ் இருக்கிறோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் இவர் போஸ்ட் செய்து இருந்தார்.
ட்விட்டரில் கட்டெறும்பு என்னும் பெயரில் இயங்கி வரும் இசக்கி ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை போஸ்ட் செய்து வருகிறார். இவர் பாஜக நிர்வாகி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று போலீசார் மூலம் இசக்கி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அவரை கைது செய்து போலீசார் ரிமாண்ட் செய்தனர். இதையடுத்து உடல்நிலையை காரணம் காட்டி கோர்ட் விசாரணையில் இசக்கி மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அவரின் மன்னிப்பு கடிதத்தை அடுத்து கண்டிஷன் பெயிலில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications