அடுத்த ஷாக்.. ஹைடெக் விபச்சாரம்.. அதுவும் டெலிகாலர் ஜாப் பெயரில்.. அரைகுறை டிரஸ்ஸில் சிக்கிய 5 பேர்
சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் செயல்படும் பிளாசாவில் உள்ள 6வது மாடியில் உள்ள ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக தெரியவந்துள்ளது
சென்னை: சென்னை அண்ணா சாலையில் செயல்படும் ஸ்பா ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, அங்கு ரெய்டு சென்ற போலீசார், பாலியல் தொழில் நடப்பதை கண்டுபிடித்தனர். அது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள சில மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் வருவதும் சிலர் கைதாவதும் நடக்கிறது. இந்நிலையில் பெயர்கூட வைக்காமல் ஸ்பா ஒன்று சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடந்ததாக சொல்லப்படுகிறது. இது மெல்ல மெல்ல வெளியே தெரியவந்தது.
பெண்களை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து சென்னை, தேனாம்பேட்டை, அண்ணாசாலையிலுள்ள பிளாசா ஒன்றின் 6-வது மாடிக்கு போலீசார் ரெய்டு சென்றனர்.

பாலியல் தொழில்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப்பிரிவின் துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில், பாலியல் தொழில் தடுப்புப்பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் இந்த ரெய்டுக்கு சென்றனர். அந்த பிளாசாவில் மசாஜ் என்ற பெயரில் வெளிமாநிலங்கள், சென்னையைச் சேர்ந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இந்த ஸ்பாவை சதீஷ் என்பவர் தன்னுடைய கூட்டாளி ஸ்ரீ சஞ்சீப் ராய் என்பவருடன் சேர்ந்து நடத்திவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்இந்த ஸ்பாவை நடத்தி வந்தவரின் கூட்டாளியான ஸ்ரீ சஞ்சீப் ராய், பெங்களூரைச் சேர்ந்த கிளப் ஒன்றின் டீம் லீடர் வினோத் குமார் ஆகியோரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அங்கிருந்து தமிழ் பெண்கள் இரண்டு பேரையும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த 3 பெண்களையும் மீட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

டெலிகாலர் வேலை
போலீசார் இதுபற்றி கூறும் போது, "சென்னையில் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் இந்த ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேனாம்பேட்டையிலுள்ள பிளாசா ஒன்றின் 6-வது மாடியில், கிளப், அறக்கட்டளை என்ற பெயரில் டெலிகாலர் வேலைக்குப் பெண்களை பணியமர்த்தி, அவர்கள் மூலம் ஹோட்டல் ரூம் புக்கிங் என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்தது ரெய்டின் போது தெரியவந்தது. இந்த கிளப்பை நடத்திய வந்த இயக்குநர், பொது மேலாளரை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் சிக்கினால் இவர்கள் முழு பின்னணி தெரிந்துவிடும்" என்றார்கள். மசாஜ் சென்டரில் இருந்து மீட்கப்பட்ட ஐந்து பெண்களும் நீதிமன்ற உத்தரவின்படி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெண்கள் பாலியல் தொழில்
இதனிடையே சென்னைக்கு வேலைத்தேடி வரும் பெண்களை குறிவைத்து அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார்கள் வந்ததையடுத்து கடந்த மாதம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தனியார் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தெரியவந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா, சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், பாலியல் தொழிலில் ஈடுபட இருந்த இரண்டு பெண்களை போலீஸார் அப்போது மீட்டனர்

மசாஜ் சென்டர்கள்
முன்னதாக கும்பகோணத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தங்கும் விடுதிகள், குடியிருப்புப் பகுதிகள், மசாஜ் சென்டர்கள் போன்றவற்றில் பாலியல் தொழில் தங்குதடையில்லாமல் புகார் எழுந்தது. இதையடுத்து இரண்டு தனியார் மசாஜ் சென்டர்களில், கடந்த இரு வாரங்களுக்கு முன் ரெய்டு நடத்தினர். பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொழிலுக்கு இவர்கள் பயன்படுத்துவது வாட்ஸ்அப் கால்கள் தானாம். அதன் மூலம் கஸ்டமர்களைப் பிடிப்பது, 'கோட் வேர்டு' மூலம் அவர்களை மசாஜ் சென்டர்களுக்கு அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications