எலிமருந்து ரூபத்தில் வீட்டுக்கு வந்த எமன்..தூக்கத்திலேயே பறிபோன பிஞ்சுகளின் உயிர்! பாய்ந்த நடவடிக்கை
சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே எலி தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக வைத்த மருந்தின் நெடி தாங்காமல் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் யுனிக் பெஸ்ட் கண்ட்ரோல் என்ற நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை குன்றத்தூர் அருகே மணஞ்சேரி நகர் பகுதியை சேர்ந்தவர் கிரிதரன். இவர் தனது மனைவி பவித்ரா, மகள் வைஷாலினி, மகன் சாய் சுந்தரேசன் உடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கிரிதரன் அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

வைஷாலினி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கிரிதரன் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இணையதளத்தில் கிரிதரன் தேடி உள்ளார்.
அப்போது சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் யுனிக் பெஸ்ட் கண்ட்ரோல் என்ற நிறுவனத்தில் முகவரி கிடைத்திருக்கிறது. இதனையடுத்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்ட கிரிதரன், தனது வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து அங்கு வந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இரண்டு பேர் வீட்டில் ஆங்காங்கே எலி மருந்தை தெளித்துள்ளனர். மேலும் பல இடங்களில் எலி மருந்துகளை வைத்து சென்றுள்ளனர். எலி மருந்து அடித்த பிறகு வீட்டில் 4 மணி நேரம் ஜன்னல் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும் காற்றோட்டமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஆனால் அன்று இரவு அனைவரும் வீட்டில் ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கி உள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென குழந்தை வைசாலிக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. காலையில் அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்படவே நண்பர்கள் உதவியுடன் கோவூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில் வைஷாலி மற்றும் சாய் சுந்தரேசன் உயரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் மயக்க நிலையில் இருந்த கிரிதரன் மற்றும் பவித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலிசார் நடத்திய விசாரணையில் எலிமருந்தை வீட்டில் வைத்ததும் நெடி பரவி ஏசி மூலமாக அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நிறுவனம் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
எலி மருந்து அடித்தபின் வீட்டில் இரண்டு மூன்று இடங்களில் வைக்க வேண்டிய எலி மருந்தை 12 இடங்களில் ஊழியர்கள் வைத்ததால் அதிகளவு நெடி பரவி பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து மருந்து வைத்துச் சென்ற தினகரன், சங்கர் தாஸ் என்ற இரு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம்குமாரை தேடி வருகின்றனர்.
மேலும் தனியார் நிறுவனம் பயன்படுத்திய எலி மருந்து தன்மை குறித்து ஆய்வு செய்ய அங்கு போலீசார் சோதனை நடத்தினர். இதில் தமிழகத்தில் எலி பேஸ்ட் வைக்க தடை இருக்கும் நிலையில் அவர்கள் அது போன்ற மருந்துகளை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து யுனிக் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications