உங்க கூட பேசியே கர்ப்பம் ஆகிட்டேன்.. அண்ணன் - தம்பிகளை ஒருசேர ஏமாற்றிய இளம்பெண்-சென்னையில் துணிகரம்
சென்னை: சென்னையில் பெண் ஒருவர் இரண்டு ஆண்களை பேஸ்புக், வாட்ஸ் ஆப் சாட் மூலமாகவே பேசி ஏமாற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் இவர் மோசடி செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாரதிராஜா. இவரின் ஒன்றுவிட்ட சகோதரர் மகேந்திரன். இருவருக்கும் பேஸ்புக்கில் சில மாதங்களுக்கு முன் சந்தியா என்ற பெண்ணிடம் இருந்து பேஸ்புக் ரெக்யூஸ்ட் சென்றுள்ளது. முதலில் பாரதிராஜாவிடம் அந்த பெண் சகஜமாக பேசி வந்துள்ளார்.
தினமும் சாட்டிங்கில் பேசி பேசி நெருக்கம் ஆகியுள்ளார். சந்தியா தனது மெசேஜில், தன்னுடைய பெயர் கீர்த்தி ரெட்டி என்றும், தன்னை ஒரு டாக்டர் என்றும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

காதல்
இவர்கள் நட்பு நெருக்கம் ஆகவே சந்தியா என்ற கீர்த்தி ரெட்டி மீது பாரதி ராஜா காதலில் விழுந்துள்ளார். இதில் இன்னொரு பக்கம், கீர்த்தி ரெட்டியின் சகோதரி நான்தான் என்று கூறி தீக்சி ரெட்டி என்ற பெண் பேஸ்புக்கில் பாரதி ராஜாவின் சகோதரர் மகேந்திரனிடம் பேசி உள்ளார். இரண்டு ஆண்களும் இரண்டு பெண்கள் மீதும் காதலில் விழுந்துள்ளார்.

செலவு
இதையடுத்து காதலை காரணம் காட்டி கொஞ்சம் கொஞ்சமாக சந்தியா இரண்டு பேரிடமும் பணம் வாங்கி இருக்கிறார். இரண்டு பெண்களும் ஒரே ஆள்தான் என்று தெரியாமல் பாரதிராஜா, மகேந்திரன் ஆகியோரும் பணத்தை வாரி இறைத்துள்ளனர். அதிலும் பாரதி ராஜாவிடம் கீர்த்தி ரெட்டி என்ற பெயரில் பேசி வந்த சந்தியா, உங்க கூட போனில் பேசியே நான் கர்ப்பம் ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

பணம்
உங்க குரலிலேயே நான் கர்ப்பம் ஆகிவிட்டேன். எனக்கு குழந்தை பிறக்க போகிறது செலவிற்கு காசு கொடுங்கள் என்று கேட்டு பணத்தை கறந்துள்ளார். இதையும் பாவம் பாரதி ராஜா நம்பி இருக்கிறார். மொத்தம் 10 லட்சத்திற்கும் மேல் அந்த பெண்ணிடம் பாரதிராஜ் ஏமாந்து உள்ளார். இன்னொரு பக்கம் மகேந்திரனும் தீக்சி ரெட்டி என்ற பெயரில் பேசி வந்த பெண்ணிடம் 20 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்து உள்ளார்.

நேரில் பார்க்கவில்லை
இவ்வளவு லட்சங்களை நேரில் பார்க்காமலேயே சந்தியா ஏமாற்றி உள்ளார். கடைசியில் அந்த பெண்ணை சந்திக்க முயன்று முடியாமல் போனதால் விரக்தியில் சென்னையில் பாரதிராஜா போலீசில் புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில்தான் சந்தியா, கீர்த்தி, தீக்ஷி எல்லாம் ஒரே பெண்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிப்பு
அவர் ஆவடியை சேர்ந்த ஐஸ்வர்யா என்று தெரிய வந்தது. போலீஸ் விசாரணைக்கு பின் ஐஸ்வர்யா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
-
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications