புறநகர் ரயிலில் அசந்து தூங்கிய பெண்.. தாம்பரம் ஷெட்டில் வைத்து பலாத்காரம் செய்த இரு ஊழியர்கள் கைது
சென்னை: சென்னை புறநகர் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பரனூரை சேர்ந்தவர் 40 வயது பெண். பழ வியாபாரியான இவர் செங்கல்பட்டிலிருந்து கடற்கரை செல்லும் ரயிலில் பயணம் செய்து பழ வியாபாரத்தை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடற்கரை டூ செங்கல்பட்டு செல்லும் அந்த ரயிலில் அந்த பெண் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷனில் இரவு நேரத்தில் ஏறினார்.

தாம்பரம்
இந்த நிலையில் அவர் மிகவும் அசதியாக இருந்ததாலும் மயக்கம் வந்ததாலும் ரயிலில் தூங்கிவிட்டார். இதனால் அவர் இறங்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டார். அந்த ரயில் செங்கல்பட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் தாம்பரம் ஷெட்டிற்கு வந்தது.

மயக்க நிலை
அப்போது சுரேஷ் மற்றும் அப்துல் ஏஜீஸ் ஆகிய இரு ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் ஒவ்வொரு பெட்டியாக பராமரிப்பு பணிக்காக சென்றனர். அப்போது அந்த பெண் பழ வியாபாரி மயக்க நிலையில் கிடந்ததை இருவரும் கண்டனர்.

போலீஸில் பிடித்து
பின்னர் அந்த பெண்ணை இருவரும் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போதும் அந்த பெண் அவர்களை தடுத்துள்ளார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் ரயிலில் சில பொருட்களை திருடிவிட்டதாக புகார் கொடுத்து உன்னை போலீஸில் பிடித்து கொடுத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

கைது
இதையடுத்து அந்த பெண் தாம்பரம் ரயில்வே போலீஸை நாடினார். அவர்கள் இருவர் மீது புகார் கொடுத்தார். இதனடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். பெண்ணை இரு ஊழியர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications