Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேபிட் டெஸ்ட் கிட்.. இது சுத்த வேஸ்ட்டுங்க.. அன்றே சொன்னாரே டாக்டர் வேலுமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேபிட் டெஸ்ட் கிட்டை 2 நாளைக்கு யூஸ் பண்ண வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் இன்று உத்தரவிட்டுள்ளது. காரணம் அது தப்புத் தப்பாக முடிவைக் காட்டுவதாக ராஜஸ்தானிலிருந்து கிளம்பிய மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஆனால் இந்த டெஸ்ட் கிட்டே ஒரு வேஸ்ட் என்று தைரோகேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ. வேலுமணி ஏற்கனவே தெளிவாக சொல்லியிருந்தார்.

இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுக்காகத்தான் பெரிய அடிதடி அறிக்கைப் போர் கமிஷன் புகார் எல்லாம் கச்சை கட்டிப் பறந்தது. ஆனால் உண்மையில் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை தைரோகேர் நிறுவனம் மிகத் தெளிவாக கூறியிருந்தது.

Tyrocare MD Velumani already told tht RTK will not useful

கொரோனாவைரஸ் தாக்கத்தைக் கண்டுபிடிக்க ஆன்டி பாடி டெஸ்ட்டை பயன்படுத்துவது குறித்து ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன. அதில் எது சரியாக வரும் என்ற வாதமும் இன்னும் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் டாக்டர் வேலுமணி தனது டிவிட்டரில் ஒரு முக்கியமான தகவலை சில நாட்களுக்கு முன்பு போட்டிருந்தார்.

இதுதொடர்பாக அவர் போட்டிருந்த டிவீட்டில், கோவிட் டெஸ்ட் தொடர்பாக, ஒவ்வொரு டெஸ்ட்டும், ஒவ்வொரு டெக்னாலஜியும் புரிந்து கொள்வது கடினமானது. நம்பகத்தன்மை, அதன் முடிவுகள், அதன் விலை என எல்லாமே குழப்பமானவை. இதுபோன்ற அவசர கால நிலையின்போது எதை வாங்குவது என்பதில் அவசர முடிவு எடுப்பது சரியானதாக இருக்காது. ஒரே தொழில்நுட்பமாகத்தான் இருக்கும். ஆனால் ஒவ்வொன்றின் விலையும் மாறுபடும் என்று டாக்டர் வேலுமணி கூறியிருந்தார்.

மேலும அவர் ஒரு செய்திக்குறிப்பையும் மேற்கொள் காட்டியிருந்தார். அதில் போய் படித்தால் தற்போது நாம் பயன்படுத்தும் ரேபிட் டெஸ்ட் கிட் எவ்வளவு பெரிய டுபாக்கூர் என்பது தெரிய வருகிறது. சீனாவிலிருந்து இங்கிலாந்து நாடு 20 மில்லியன் டாலர் அளவுக்கு பணம் செலவழித்து சோதனைக் கருவிகளை வாங்கியுள்ளது. ஆனால் எதுவுமே சரியான ரிசல்ட்டைக் காட்டவில்லையாம். எதுவுமே பயன்படவில்லை என்று இங்கிலாந்து டாக்டர்கள் புலம்பியுள்ளனர்.

Tyrocare MD Velumani already told tht RTK will not useful

இரண்டு சீன நிறுவனங்கள்தான் ஆன்டிபாடி டெஸ்ட் கிட்டுகளை தயாரித்து விற்கின்றன. ஒன்று ஆல்டெஸ்ட் பயோடெக். இன்னொன்று வோன்ட்போ பயோடெக். ஐரோப்பிய யூனியனின் சுகாதார தரக் குறியீடுகளுக்கேற்பவே தங்களது கிட்டுகள் தயாரிக்கப்படுவதாக அவை கூறியுள்ளன. ஆனால் இங்கிலாந்திலோ வேறு விதமான ரியாக்ஷனே கிடைத்துள்ளது.

அதேபோல ஆன்டிபாடி டெஸ்ட்டுகள் குறித்தே பல சர்ச்சைகள், வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. உண்மையில் பிசிஆர் சோதனைதான் சரியானது என்று சொல்கிறார்கள். அதில் கிடைக்கும் ரிசல்ட் நிச்சயம் ஆன்டிபாடி சோதனையில் கிடைக்காது என்கிறார்கள். அதேபோல ஆன்டிபாடி டெஸ்ட்டில் கிடைக்கும் ரிசல்ட் பிசிஆர் டெஸ்ட்டில் கிடைக்காது. மேலும் பலர் ஆன்டி பாடி டெஸ்ட் ரிசல்ட்டில் வருவதே சரியானது என்று நினைக்கிறார்கள். அது தவறான கருத்தாகும்.

Tyrocare MD Velumani already told tht RTK will not useful

ஆன்டிபாடி டெஸ்ட்டுக்கு தற்போது 3 வகையான கிட்டுகள் உள்ளன. ஒன்றுதான் இந்த ரேபிட் டெஸ்ட் கிட். இதைத்தான் நாம் இப்போது பயன்படுத்தி வருகிறோம். இது குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. இதன் மூலம் 20 நிமிடங்களில் முடிவை அறியலாம். ஆனால் வரும் முடிவு சரியானது என்று உறுதியாக சொல்ல முடியாது. அதாவது இதை முழுமையாக நம்ப முடியாது. இதைத்தான் இப்போது இந்தியா கையில் வைத்துக் கொண்டு விழித்துக் கொண்டிருக்கிறது.

அதேபோல இன்னொரு கிட் எலிசா கிட். இது மே மாதம்தான் வரப் போகிறது. இதன் மூலம் முடிவை அறிய 24 மணி நேரமாகும். இதில் கிடைக்கும் முடிவை கொஞ்சம் நம்பலாம்.

Tyrocare MD Velumani already told tht RTK will not useful

அடுத்து வருவதுதான் கிளியா கிட். இதுதான் முக்கியமான கிட். இதை முழுமையாக நம்ப முடியும். மே மாதம்தான் இதுவும் கிடைக்கும். ரிசல்ட் கிடைக்க 24 மணி நேரமாகும். சரியான துல்லியமான முடிவை இது கொடுக்குமாம். தற்போது சீனாவிலிருந்துதான் இத்தனை கிட்டுகளும் வருகின்றன. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் கிட்டுகள் மே மாதத்தில்தான் கிடைக்கும். விலையும் மலிவாக இருக்கும்.

இப்படிப்பட்ட டுபாக்கூரான ரேபிட் டெஸ்ட் கிட்டுகளைத்தான் தற்போது அனைத்து மாநில அரசுகளும் கையில் வைத்துக் கொண்டுள்ளன. ராஜஸ்தானில் இது பல்லிளித்து விட்டது. இதையடுத்து ஐசிஎம்ஆர். அவசரமாக இதில் தலையிட்டுள்ளது.

டாக்டர் வேலுமணி வரவேற்பு

இதற்கிடையே ரேபிட் டெஸ்ட் கருவியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை டாக்டர் வேலுமணி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக தற்போது போட்டுள்ள டிவீட்டில், அதிகமாக பேசப்பட்ட, அதிக விலை வாய்ந்த ரேபிட் டெஸ்ட் கருவியை பயன்படுத்த ஐசிஎம்ஆர் தடை விதித்துள்ளது. இதைத்தான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தோம். பிசிஆருக்கு நிச்சயம் ரேபிட் டெஸ்ட் கிட் மாற்று அல்ல. நம்பகமான, விலை மலிவான கருவி எலிசா அல்லது கிளியாதான். அது மே மத்தியில்தான் கிடைக்கும்.

சரியானது எல்லாம் ஈஸியாக கிடைக்காது.. ஈஸியாக இருப்பதெல்லாம் சரியானதாக இருக்காது.. என்று டாக்டர் வேலுமணி இன்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+