கனவில் கூட நினைச்சிருக்க மாட்டாங்க.. உதயநிதி காட்டிய அதிரடி.. . கலக்கத்தில் திமுக சீனியர்கள்?
சென்னை:திமுகவின் லோக்சபா வேட்பாளர் தேர்வில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியை உறுதி செய்து, தொகுதிகளையும் இறுதி செய்துவிட்ட நிலையில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வெளியிட்டுள்ளது.. இந்த பட்டியலில் சீனியர்கள் மற்றும் வாரிசுகள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளார்கள். குறிப்பாக முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகள் வேட்பாளர்களாக இடம்பெற்றுள்ளார்கள்

தூத்துக்குடி- கனிமொழி, வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி (முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன்), தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன் (அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தங்கை) , மத்திய சென்னை- தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, காஞ்சீபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை, வேலூர்- கதிர் ஆனந்த் (அமைச்சர் துரைமுருகன் மகன்), நீலகிரி (தனி) - ஆ.ராசா,
பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தர்மபுரி தொகுதியில் ஆ மணி, ஆரணி தொகுதி- எம்எஸ் தரணி வேந்தன், கள்ளக்குறிச்சி தொகுதி- ஏ மலையரன், சேலம் தொகுதி- டிஎம் செல்வ கணபதி(முன்னாள் அமைச்சர்), ஈரோடு தொகுதி - கேஇ பிரகாஷ், கோவை - கணபதி ராஜ்குமார், தஞ்சாவூர் - ச.முரசொலி, தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார், பெரம்பலூர் - அருண் நேரு, தேனி - தங்க தமிழ்செல்வன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுகவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உதயநிதி கோரிக்கை வைத்திருந்தார். அதன்படியே லோக்சபா தேர்தலில் இளைஞர்களுக்கு கணிசமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு தொகுதியில் தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளர் பிரகாஷ், தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார், பெரம்பலூர் - அருண் நேரு, தேனி - தங்க தமிழ்செல்வன், தர்மபுரி தொகுதி-ஆ மணி, பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, ஆரணி தொகுதி- எம்எஸ் தரணி வேந்தன், கள்ளக்குறிச்சி தொகுதி- ஏ மலையரன், கோவை - கணபதி ராஜ்குமார், தஞ்சாவூர் - ச.முரசொலி உள்பட 11 பேர் புதுமுகங்கள் ஆவார். இவர்களை தேர்வு செய்ததில் உதயநிதிக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி தான் ஒவ்வொரு தொகுதி வாரியாக வேட்பாளர்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.. உதயநிதி இந்த முறை அதிகப்படியான புதுமுகங்களை தேர்வு செய்திருக்கிறார் என்பது பட்டியலை பார்த்தாலே புரியும். இதனால் சீனியர்கள் கலக்கத்தில் உள்ளனர்..












Click it and Unblock the Notifications