உதயநிதி ஸ்டாலின் சரியாகத்தான் பேசியிருக்கிறார்.. ஒரு நூற்றாண்டின் குரல்.. எழுத்தாளர் மதிமாறன் பேட்டி
சென்னை: எழுத்தாளர் மதிமாறன் ஒன் இந்தியா அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியின் விவரங்களை இங்கே பார்க்கலாம்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என சென்னை மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். ஆனால் வட இந்திய பாஜகவினரோ, சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறவர்களை இனப்படுகொலை செய்ய சொன்னார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பொய் பிரசாரம் செய்துவிட்டனர். இதனடிப்படையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் வரிந்து கட்டிக் கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக எழுத்தாளர் மதிமாறன் ஒன் இந்தியா அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியின் விவரங்களை பார்க்கலாம்.
கேள்வி: உதயநிதி சனாதனம் குறித்து பேசியது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் கடுமையான எதிர்வினை ஆற்றுகிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: உதயநிதி சரியாக பேசியிருக்கிறார். இன்னொன்று சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியிருக்கிறார்கள். இந்த மாநாட்டில் ரொம்ப தெளிவாக.. அதாவது சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியவர்களுக்குத் தான் இது புதிது.. எங்களுக்கு இது புதிது கிடையாது என்ற ஸ்டைலில் தான் அவரது பேச்சு இருப்பதாக நான் புரிந்து கொண்டேன். 100 வருஷமாக சனாதனம் பேசிக் கொண்டு இருக்கிறோம். நீங்கள் இன்னைக்குதான் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற ஸ்டைலில் திராவிட இயக்கத்திற்கே உரிய மிடுக்கோடுதான் அவர் பேசுகிறார். பிறகு பட்டியலிடுகிறார்.
கேள்வி: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை ஒரு இனப்படுகொலை என்ற டோனுக்கு உதயநிதி பேசுகிறார் என்பதுதான் அண்ணாமலை, அமித்ஷா பேசுகிறார்கள்..
பதில்: சனாதானம் இங்கு பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே இருக்கு.. அதற்கு எதிராக போராடி போராடிதான் இங்கே வந்து இருக்கிறது. உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார்களே அவர்களுக்கு தான் சனாதனம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. தாத்தா பெயர்லாம் கொடுத்தார்கள் அல்லவா.. அந்த பட்டியலுக்குதான் அவர் கொடுத்தார். நாங்கள் சனாதனத்திற்கு எதிராக இருக்கிறோம் என்று. உங்க தாத்தாவால் முடியவில்லை என்பது அவர் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி. அது எல்லாம் சேர்ந்துதான் இங்கே பிரதிபலிக்கிறது.
சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று தலைநகர் சென்னையில் சொல்கிறார். தமிழ்நாட்டில் எந்த எதிர்ப்புமே இல்லையே..அது அவர் தாத்தா செய்த வேலைதானெ... சம்பந்தமே இல்லாமல் வட இந்தியாவில் எதிர்ப்பு வருகிறது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசும் போது.. இங்குஇந்துக்கள் இருக்கிறார்கள். ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்றால் இங்கு சனாதன ஒழிப்பு, சனாதன எதிர்ப்பு 100 வருஷமாக இருக்கிறது. அதனால்தான் படித்து வந்து இருக்கிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் புரிதல் சரியாக உள்ளது.
கேள்வி; ஆங்கிலேயர் காலத்தில் கூட சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற பேச்சு வரவில்லை. உதயநிதிக்கு சனாதானத்தை பற்றி எல்லாம் தெரியாது என்று அண்ணாமலை குற்றச்சாட்டு வைக்கிறாரே..
பதில்: முதலில் பகவத் கீதையை அண்னாமலையை படிக்க சொல்லுங்கள். பகவத் கீதையில் என்ன எழுதப்பட்டு இருக்கிறது. முதலில் பகவத் கீதையை படியுங்கள்.பகவத் கீதை நான்கு வர்ணத்தை நியாயப்படுத்திதான் பகவத் கீதை எழுதப்பட்டுள்ளது. பகவத் கீதை அதைத்தான் சொல்கிறது. அண்ணாலை தனது பதவிக்காகவும் செல்வாக்குக்காகவும் பிழைப்புவாதத்திற்காகவும் பேசுகிறார். அவருக்கு பகவத் கீதை தெரிவது இல்லை. அவருக்கு பேஸிக் ஆன சட்ட விஷயம் கூட தெரியவில்லை. முதலில் பகவத் கீதை, ராமாயணத்தை முதலில் அவரை படிக்க சொல்லுங்கள்.
எழுத்தாளர் மதிமாறனின் பேட்டியின் முழு வடிவத்தை ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலில் பார்க்கலாம்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications