நகராட்சி பள்ளியா இது?... 56 லட்சம் செலவில் ஸ்மார்ட் க்ளாஸ் ரூம்ஸ்.. - திகைப்பில் ஆழ்த்திய உதயநிதி
சென்னை: ஸ்மார்ட் வகுப்பறைக்கும் மாறி இருக்கிறது சென்னையில் உள்ள ஒரு நகராட்சி நடுநிலைப் பள்ளி. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் 114வது வார்டு பெல்ஸ் சாலையில்தான் அந்தப் பள்ளி அமைந்துள்ளது. அந்த அதிரடியான மாற்றத்தை தன் தொகுதிக்கு அழைத்துக் கொண்டுவந்துள்ளார் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

56 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள்:
ஏறக்குறைய ஒரு வகுப்பறைக்கு சுமார் ரூ.2 லட்சம் என மொத்தம் 28 வகுப்பறைகளை ஸ்மார்ட் கிளாசுகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உதயநிதி ஸ்டாலின் இதற்காக ரூ.56 லட்சத்தை ஒதுக்கித் தந்துள்ளார். அதற்கான அனைத்து வேலைகளும் முடிந்து இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி இந்த வகுப்பறைகளை மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவைத்துள்ளார் உதயநிதி. அதற்கான விழாவில் பங்கேற்ற உதயநிதியை முதலில் அங்கிருந்த ஒருவர் ஆசிரியர் எழுதச் சொன்னார்.
அவர் தன் கைக்கு வந்த டிஜிட்டல் பலகையின் எழுதுகோலை ஒரு மாணவியை அழைத்து எழுதக் கொடுத்தார். அந்த மாணவி தன் பிஞ்சு விரல்களால் முதன்முதலாக அனுஷ்கா, என முதலில் தமிழிலும் பின் ஆங்கிலத்திலும் எழுதினார். அங்கேயே மாநிலத்தின் இருமொழிக் கொள்கை பலகையில் பளிச்சிட்டது.
பிறகு டிஜிட்டல் பலகையில் எழுதிய எழுத்துகளை எப்படி அழிப்பது எனக் கற்றுக் கொடுத்தனர். அம்மாணவியும் அழகாக அழித்துவிட்டு, பின் உதயநிதியைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தார்.
அடுத்ததாக மாணவன் ஒருவன் அழைக்கப்பட்டான். வி.மகேஷ் எனத் தயங்கித் தயங்கி எழுதிப் பழகினான். 'தைரியமா எழுதுப்பா தம்பீ' என்றவர், அதன்பின் உதயநிதியே அந்த எழுதுகோலை வாங்கி, 'உதயநிதி ஸ்டாலின்' என எழுதிக் காட்டினார். வகுப்பறையிலிருந்த அனைவரும் கைதட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் வகுப்பறையிலிருந்த அனைத்து குழந்தைகளுக்கும் சாக்லெட் வழங்கி தனது அன்பை வெளிப்படுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் கரும்பலகை மட்டும் டிஜிட்டல் அல்ல; குழந்தைகள் அமரும் இருக்கைகள் மற்றும் மேலைகள் தனியார் பள்ளிகளின் தரத்திற்கு இணையாக மாற்றப்பட்டுள்ளன என்பது மிகச் சிறப்பான விஷயம்.

தமிழ்நாடு காணாத அதிசயங்கள்:
இங்குள்ள டிஜிட்டல் திரை எழுத, பாடம் படிக்க மட்டும் அல்ல; அதில் யூடியூப் பார்க்கலாம். அதன் வழியே வேறுசில கல்விப் பாடங்களை ஒளிவடிவில் கேட்டுப் படிக்கலாம். ஒரு நகராட்சிப் பள்ளியில் இந்த மாதிரியான மாற்றம் எல்லாம் காணமுடியாத அதிசயம். ஒரு காலத்தில் சாக்பீஸ் கேட்டுப் பெறுவதற்கே ஆசிரியர்கள் உயரதிகாரிகளிடம் படாதபாடு படவேண்டி இருக்கும்.
ஆனால், இன்று முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள பிள்ளைகள் அனைவருக்கும் காலை உணவு போடுகிறார். மகன் உதயநிதி ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கிக் கொடுக்கிறார். இவை எல்லாம் தமிழ்நாடு இதுவரை காணாத அதிசயங்கள்.
இது குறித்துப் பேசிய உதயநிதி, "இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கல்வித்துறை சார்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருகிறார். அதுதான் திராவிட மாடல் ஆட்சி.
இப்போது முதன்முறையாக என் தொகுதியில் நடமாடும் கலைஞர் நூலகத்தைத் தொடங்கி இருக்கிறோம்" என்றவர் போர்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய மாணவியின் செயல்பாட்டை எடுத்து விளக்குவதைப் போல், "நமக்கு ஆங்கிலமும் தமிழும் இருந்தாலே போதும். மூன்றாவது மொழி தேவையா? நாம் யாரும் மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டாம் எனச் சொல்லவில்லை. ஆனால் திணித்தால் அதை எதிர்த்து நிற்போம். அதற்கு மாணவச் செல்வங்கள் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.
அவரது தொகுதியில் உள்ள கல்லூரியில் நடந்த பள்ளிப் பிள்ளைகளுக்கான பேச்சுப் போட்டியையும் அவர் தொடங்கிவைத்தவர், 'நமது தமிழ்நாட்டு வரலாற்றைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் நோக்கில் தலைப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றார்.

ஆங்கிலத்தில் சக்கைப் போடு போட்ட மாணவி:
தனது தொகுதியில் மட்டும் இல்லை. தமிழ்நாடு முழுவதும் கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று பலதிட்டங்களைத் தொடங்கிவைத்து வருகிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி. கரூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது ஒரு மாணவி, மேடையில் அவரை ஆங்கிலத்தில் பேசி வரவேற்றார்.
அத்துடன் தமிழ்நாடு அரசு மாணவச் செல்வங்களுக்காகக் கொண்டுவந்துள்ள பல்வேறு திட்டங்களைப் பட்டியல் போட்டு ஆங்கிலத்தில் பொளந்து கட்டினார். ஒரு அரசுப் பள்ளி மாணவியின் ஆங்கில பேச்சைக் கேட்டு அரங்கமே உற்சாகத்தில் மிதந்தது. உதயநிதியோ ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்.
இந்த விழா குறித்து தனது ட்விட்டரில் உதயநிதி, "அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசப் பயிற்சி, புத்தக வாசிப்பை ஊக்குவிக்க அரசுப் பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பு புத்தகங்கள் என நம்பிக்கையளிக்கிறது கரூர் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு.
அதற்கு அரசு நலத்திட்ட உதவி மேடையில் ஆங்கிலத்தில் பேசிய மாணவிகள் மனிஷா-சாகின்பானு நல்ல உதாரணங்களைப் பார்க்க முடிந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக அவர், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிக்குச் சென்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளின் உடல்-மன நலனை மேம்படுத்த வழங்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
மேற்கொண்டு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தார். அங்குள்ள வகுப்பறைக்குச் சென்று அரசின் சொத்தாகத் திகழும் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அது தன் மனதிற்கு மகிழ்வைத் தந்தது என்றும் அவர்களுக்கு என் அன்பைத் தெரிவித்து மகிழ்ந்தேன் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் கைகளில் இனி டேப்லெட்:
அதே நாமக்கல் மாவட்டம் அழகு நகர் பகுதி அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இன்று ஆய்வு அவர், மாணவர்களுடன் உணவருந்தி, உணவு தரமாகவும் சுவையாகவும் வழங்கப்படுவதை உறுதிசெய்தார். இத்திட்டத்தால் அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த அரசு மாணவர்களின் நலனில் மட்டும் அக்கறை கொண்டிருக்கவில்லை. இதற்கு இணையாக ஆசிரியர் நலனிலும் அக்கறை கொண்டு இயங்குகிறது என்பதைத் தனது பிறந்தநாளில் உணர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் நலனுக்காக டேப்லெட் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர். அதேபோல் ஆசிரியர்களின் உடல்நலம் காக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் நலத்திட்டங்களை மாணவர்களிடையே கொண்டுபோய் சேர்க்கும் ஆசிரிய பெருமக்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் ஆணைப் பிறப்பித்துள்ளார். அதோடு ஆசிரியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்காகச் செலவுத் தொகையை 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் சொல்லி இருக்கிறார்.
ஆக, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நலன் காக்க இந்த அரசு போட்டுள்ள திட்டங்கள் இதுவரை எந்த அரசும் செய்ததில்லை என்பது மட்டும் அல்ல யோசித்ததே இல்லை என்பது முக்கியம்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications