சர்ப்ரைஸ் மோடி.. ஒருபக்கம் உதயநிதி.. மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க!
சென்னை : காவிரி டெல்டா பகுதியில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுவதாக மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
சட்டசபையில் இது தொடர்பாக விவாதம் நடந்த போது, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், முதலமைச்சராக மட்டுமல்ல, டெல்டாக்காரனாகவும் சொல்கிறேன், காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதியளிக்காது. எல்லோரையும் விட இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஸ்டாலின் கடிதம்
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இதுபற்றி குரல் எழுப்பினார்கள்.அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு காவிரி டெல்டா பகுதியில் புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்து கடிதம் எழுதினார்.
இதனிடையே எதிர்க்கட்சியான அதிமுகவும் காவிரி டெல்டா பகுதியில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியது.இதேபோல் தமிழக பாஜக சார்பில் அண்ணாமலையும் நிலக்கரி துறை அமைச்சரை சந்தித்து காவிரி டெல்டா பகுதியில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி நன்றி
இந்நிலையில் காவிரி டெல்டா பகுதியில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: காவிரி டெல்டா விவசாயிகளின் நலனுக்காக பாதுகாக்கப்பட்ட_வேளாண்மண்டலம் அஇஅதிமுக ஆட்சியில் கொண்டவரப்பட்டது. இந்நிலையில், அண்மையில் அங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது,
அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: காவேரி டெல்டா விவசாயிகளின் நலனுக்காக பாதுகாக்கப்பட்ட_வேளாண்மண்டலம் அஇஅதிமுக ஆட்சியில் கொண்டவரப்பட்டது. இந்நிலையில், அண்மையில் அங்கு நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டது,
தூங்கிக் கொண்டிருந்த, காலங்கடந்து எதிர்ப்பு தெரிவித்த விடியா திமுக அரசின் கவனத்தை ஈர்க்க தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்ததுடன், நாடாளுமன்றத்திலும் அதிமுக கவன ஈர்ப்பு கொண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று மத்திய சுரங்கத் துறை அமைச்சர், தமிழ் நாட்டில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுவதாக அறிவித்தது,
தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதற்காக மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

உதயநிதி ட்வீட்
இதனிடையே உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் ஒன்றிய அரசு அத்திட்டத்தையே கைவிட்டுள்ளது.இது டெல்டாக்காரராக முதலமைச்சர் அவர்களுக்கும்-தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி. விவசாயம் காப்போம் என்று கூறியுள்ளார்.
திமுக ஐடி விங் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றும், அதிமுகவோ எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறி ட்வீட்டுகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால் இரண்டு கட்சிகளுமே ஒற்றுமையாக சொன்ன ஒரு விஷயம்.. தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்பது தான்.ஒரு பக்கம் பிரதமர் வருகைக்கு நடுவே, இந்தசண்டை தான் ட்விட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications