விஜய்யை ரொம்பவே உலுக்கிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு! வீட்டுக்கு போய் கொடுத்த பதிலடி
சென்னை: புதுமையாக ஆட்சி நடத்துவீர்கள் என்று பார்த்தால், 'புஷ்பா' படம் போல் ஆட்சி நடத்துகிறீர்கள். க்ளீன் கவர்மெண்ட் என்று சொன்னீர்கள் இதுதான் உங்கள் கிளீன் கவர்மெண்ட்டின் லட்சணமா என விஜய்யை சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் ரோஸ்ட் செய்தார். உதயநிதியின் இந்த சரவெடி பேச்சுக்கு சட்டமன்றத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு பதிலளிக்காமல் விஜய் இருந்தார். எனினும் உதயநிதியின் இந்த பேச்சு விஜய்யை ரொம்பவே உலுக்கியதால், பொறுக்க மனமின்றி வீட்டிற்கு போய், ஆற அமர தனது எக்ஸ் தளத்தில் உதயநிதிக்கு பதிலடி கொடுத்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் .
தமிழக சட்ட சபையில் ஆளுநர் உத்தரவுப்படி தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யை விட்டு விளாசினார். உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன பாஜக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில், போட்டியிட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரை அந்தக் கட்சி தலைவருக்கே தெரியாமல் இந்த ஆட்சிக்கு ஆதரவு தர வைத்திருந்தீர்கள்.

சரமாரியாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
இப்போது நான் சொல்வது மிகவும் டீசண்டான வெர்ஷன். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சியான அ.தி.மு.க. கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. பிளவு பட்ட ஒரு அணி உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து நடந்த இன்சிடென்ட் தான் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட். பிளவு பட்ட குரூப்பில் இருக்கக்கூடிய ஒரு தலைவரின் வீட்டிற்கு ஒரு புது சோபா செல்கிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
— DMK (@arivalayam) May 13, 2026
- கழகத் தலைவர், திரு @mkstalin அவர்கள்#TVKFails pic.twitter.com/Lkd00nbSW3
சோபா பின்னாடியே புது முதல்வரும் செல்கிறார். புதுமையாக ஆட்சி நடத்துவீர்கள் என்று பார்த்தால், 'புஷ்பா' படம் போல் ஆட்சி நடத்துகிறீர்கள். தேர்தல் நேரத்தில் ஊழல் சக்தி என்று சொன்னீர்கள். ஆனால் இன்றைக்கு சோஷியல் மீடியாவில் மக்கள் உங்களைப் பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். என்ன கேட்கிறார்கள் தெரியுமா. அந்த ஊழல் சக்தியோடு சேர்ந்து இருக்கின்ற ஆளுங்கட்சியை இப்போது என்ன சக்தி என்று கூறப்போகிறீர்கள்?
When leaders talk, Vijay takes note.
— Priya Purohit (@Priyaa_Purohit) May 13, 2026
When Vijay talks, Tamil Nadu listens.
AURA of CM Chandrasekaran Joseph Vijay.......🥶🥶🔥🔥 pic.twitter.com/rg34yULxWU
சரியான எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி
க்ளீன் கவர்மெண்ட் என்று சொன்னீர்கள் இதுதான் உங்கள் கிளீன் கவர்மெண்ட்டின் லட்சணமா என்று மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி நீங்கள் கூவத்தூரையும் மிஞ்சுகின்ற அளவிற்கு, அடிக்கின்ற கூத்தைப் பார்க்கும்போது இந்த அரசு எத்தனை நாளைக்கு நீடிக்க போகிறது என்று மக்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. முதல் கோணலே முற்றிலும் கோணல் என்பது மாதிரி உங்கள் நடவடிக்கைகள் எல்லாமே இன்றைக்கு எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறது" என உதயநிதி பேசினார்.
சொந்தமா யோசிச்சி சட்டமன்றத்திலேயே சுடச்சுட பதில் சொல்ற அளவுக்கு விஜய்க்கு மண்டையில அறிவு கிடையாது. அதனால வீட்டுக்கு போயி யாரையாவது பதில் எழுதி தரச் சொல்லி வெளியிடுவான்னு எதிர்பார்த்தேன். அதையேதான் செஞ்சிருக்கான். https://t.co/p2MQ0lSu5E
— பூதம் (@angry_birdu) May 13, 2026
உதயநிதியின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்கலில் அதிகம் டிரெண்ட் ஆனது. உதயநிதியின் இந்த சரவெடி பேச்சுக்கு சட்டமன்றத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு பதிலளிக்காமல் விஜய் இருந்தார். உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசியது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆன நிலையில் பலரும் உதயநிதிக்கு பாராட்டு தெரிவித்து கருத்து பதிவிட்டு வந்தனர்.
சரியான எதிர்க்கட்சி தலைவர் போல செயல்படுகிறார் என்றும் கூறி வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "திமுக எதிர்க்கட்சியாக எப்படி செயல்படும் என்பதை அண்ணன் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தவெக அரசுக்கு இன்று ஒரு sample காட்டியிருக்கிறார்!" என்று பதிவிட்டு இருந்தார்.
உதயநிதி அடிக்கடி பேச வேண்டும்
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "அரசியல் முதிர்ச்சி இல்லாத அனுபவம் இல்லாத தற்குறித்தனமான பேச்சைக் கண்டு மக்கள் சிரிக்கிறார்கள்.. இனி உதயநிதி அவர்கள் அடிக்கடி பேச வேண்டும் என்பது எங்கள் தாழ்மையான வேண்டுகோள்.." என்று கூறியுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ராஜினாமா செய்துள்ளார் முதல்வர் விஜய் என்பதை உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசிய நிலையில், அதனையும் நெட்டிசன்கள் நினைவு கூர்ந்துள்ளனர். மொத்தமாக நன்றி சொன்னாரே தவிர, திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்த பிறகாவது எதாவது ஒரு நன்றியை தெரிவித்து இருக்கலாம் எனவும், இதை செய்ய தவறியை விஜய்யின் தவறை சரியாக சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியதாகவும் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் உதயநிதி பேசியது மாஸாக இருந்தது என்றும், அதற்கு விஜய் பதில் அளிக்காமல் இருந்தது விமர்சனத்திற்கும் உள்ளாது.
வீட்டிற்கு சென்று விஜய் போஸ்ட்
விஜய்யை ரொம்பவே உதயநிதியின் பேச்சு உலுக்கியுள்ளது. இதனால், பொறுக்க மனமின்றி வீட்டிற்கு போய், ஆற அமர தனது எக்ஸ் தளத்தில் உதயநிதிக்கு பதிலடி கொடுத்து எக்ஸ் தள பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ராஜினாமா செய்துள்ளார் முதல்வர் விஜய்- உதயநிதி ஸ்டாலின் 🔥🔥
— Mmpvijaykumar (@46Mmp) May 13, 2026
தோல்வியில் மூழ்கி திக்கித் திணறும் திமுக நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில் நமது அரசு இருக்கும்; அதைப் பார்த்து திமுக ஆற்றாமையில் அலறப்போவது உறுதி. ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே திமுக திமிராகப் பேசுகிறது. மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி புகழ்பெற்ற போகும் மக்கள் அரசை புஷ்பா அரசு என்று திமுக ஏளனம் செய்கிறது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்த மாட்டோம். நமக்கு எதிராக புறம் பேசட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications