யார் அட்டாக் பண்ணா? வீடியோ கால் செய்த உதயநிதி.. இரவே போன செந்தில் குமார்.. ஜேஎன்யூவில் சீறிய திமுக!
தட்டி கேட்ட இன்னும் சில தமிழ்நாடு மாணவர்களையும் ஏபிவிபி அமைப்பினர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
சென்னை: ஜேஎன்யூ பல்கலையில் தமிழ்நாடு மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆளும் திமுக அரசு அடித்து ஆட தொடங்கி உள்ளது. இரவே திமுக எம்பி சென்று சந்தித்தது.. அதிகாலையில் அமைச்சர் போனில் பேசியது என்று திமுக இந்த விவாகரத்தில் அடித்து ஆடி வருகிறது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும் தமிழ்நாடு மாணவர்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜேஎன்யூ மாணவர் அமைப்பில் இருக்கும் தமிழ்நாடு மாணவர்களை இவர்கள் தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலில் தமிழ்நாடு மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். ஒரு மாணவருக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.

கொடுமை
இதை தட்டி கேட்ட இன்னும் சில தமிழ்நாடு மாணவர்களையும் ஏபிவிபி அமைப்பினர் சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த தாக்குதல் தேசிய அளவில் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கடுமையான காயங்களுடன் ஆம்புலன்சில் ஏறிய தமிழ்நாடு மாணவரையும் ஆம்புலன்சில் ஏறி ஏபிவிபி மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக துணை வேந்தரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு இருக்கும் பெரியார் படம் ஒன்றை ஏபிவிபி மாணவர்கள் உடைத்து உள்ளனர்.

பெரியார்
இந்த படம் உடைக்கப்பட்ட காரணத்தால் தமிழ்நாடு மாணவர்கள் அதை தட்டி கேட்டுள்ளனர். இதையடுத்தே ஏபிவிபி மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஏபிவிபி மாணவர்களோ சத்திரபதி சிவாஜி படத்தை அவமதித்திவிட்டனர். அதை தரையில் போட்டு உடைத்துவிட்டனர். அதை தட்டி கேட்ட போது சண்டை ஏற்பட்டுவிட்டது. இதில் நாங்கள் யாரையும் அவமதிக்கவில்லை என்று குறிப்பிட்டனர். ஜேஎன்யூ பல்கலையில் தமிழ்நாடு மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆளும் திமுக அரசு அடித்து ஆட தொடங்கி உள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விவாகரத்தில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கண்டனம்
பல்கலைக்கழக நிர்வாகம் இதில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஆக்சன் எடுக்க வேண்டும். போலீசார் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில்தான் திமுக எம்பி செந்தில் குமார் நேற்று இரவோடு இரவாக ஜேஎன்யூ சென்றார். அங்கே தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாடு மாணவர்களை பார்வையிட்டார். அவர்களிடம் பேசினார். காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக கூறினார்.

துணை வேந்தர்
பின்னர் துணை வேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகிகளை சந்தித்து ஏபிவிபி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பின் பெரியார் போட்டோ நீக்கப்பட்ட அதே இடத்தில் மாணவர்களுடன் இணைந்து புதிய பெரியார் போட்டோவை எம்பி செந்தில் குமார் வைத்தார். இந்த நிலையில்தான் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று போன் செய்தார்,. வீடியோ காலில் பேசிய உதயநிதி ஸ்டாலின்.. எப்படி இருக்கீங்க.. நாங்க ஆக்சன் எடுக்க சொல்லுறோம்.. கவலைப்படாதீங்க.. யார் அட்டாக் பண்ணா.. ஏபிவிபி அமைப்பா என்று கேள்வி எழுப்பி.. மாணவர்ளிடம் பேசினார். திமுக தரப்பு இந்த விவகாரத்தில் அடித்து ஆட தொடங்கி உள்ளதால் தேசிய அளவில் ஜேஎன்யூ மோதல் கவனம் பெற்றுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications