"ஆக, திமுக சொல்றதை தானே, அதிமுக செய்யுது.. அப்ப சரியாதானே செயல்படுது" உதயநிதிக்கு குவியும் கேள்விகள்
உதயநிதி பதிவிட்ட ட்வீட், திமுக-அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது
சென்னை: "ஆக, திமுக சொல்றதை தானே, அதிமுக செய்கிறது? அப்பறம் ஏன் அதிமுக சரியாக செயல்படவில்லை என்று திமுக கூறுகிறது?" என்று உதயநிதி போட்ட ட்வீட்டுக்கு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. "ஸ்டாலின் சொல்றார்.. முதல்வர் செய்யறார்" என்ற உதயநிதியின் ட்வீட்டினால், சோஷியல் மீடியா முழுவதுமே அதிமுக - திமுக கட்சியினர் தங்களது கமெண்ட்களால் அதகளப்படுத்தி வருகின்றன!
கொரோனா தொற்று உச்சத்துக்கு போன காலத்தில் இருந்தே, திமுக சுறுசுறுப்பாகிவிட்டது.. ஒரு பக்கம் தடுப்பு நடவடிக்கையில் அக்கட்சி இறங்கினாலும், அதிமுக அரசை தினமும் ஒரு கேள்வியை கேட்டு கொண்டே இருந்தது.. பல கேள்விகளுக்கு அதிமுக தரப்பு பதில் சொன்னாலும், சிலவற்றுக்கு சரியான விளக்கத்தை தர முடியாத சூழலும் ஏற்பட்டது.
குறிப்பாக கோயம்பேடு, டாஸ்மாக் விவகாரம், தொற்றை கட்டுப்படுத்த தவறியது போன்றவற்றிற்கு அரசு சரியான பதிலை சொல்ல முடியவில்லை.. அதேசமயம், ஸ்டாலின் விடும் அறிக்கைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் எடப்பாடியார் ஒருகட்டத்தில் டென்ஷன் ஆகவே செய்தார்.

அறிவிப்புகள்
இப்போது பொதுப் போக்குவரத்தான பஸ் இயக்குவது, இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவது, உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.. இந்த அறிவிப்புகளை அடுத்து, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.

இ-பாஸ்
அதில், "தமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதனை அச்சுப்பிசகாமல் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து உட்பட அனைத்திலும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக தலைவர் (மு.க.ஸ்டாலின்) சொல்கிறார் அதனை ஈபிஎஸ் செய்கிறார்.' என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

ஆதரவு
உதயநிதி போட்ட இந்த ட்வீட், அதிமுக - திமுக இரு தரப்பினரிடையே மிகப்பெரிய ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்களை தாங்கி வருகிறது.. இந்த ட்வீட்டை கழக உடன்பிறப்புகள் பாராட்டி வருகிறார்கள்.. திமுக தலைவர் சொன்னது அத்தனையுமே நடந்து வருகிறது என்றும், மக்களுக்காக ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்தான் தற்போது அமலாகி வருகின்றன என்றும் ட்வீட் போட்டு மகிழ்கிறார்கள்.

விமர்சனங்கள்
அதேபோல, சோஷியல் மீடியாவில் அதிமுகவினர் கொந்தளித்துள்ளனர்.. "காக்கா உட்கார பனை மரம் விழுந்துச்சாம்" என்கிறார்கள்.. "கடைசிவரைக்கும் @mkstalin அறிவிக்கப்படாத முதல்வராகவே தான் இருப்பார். கவலை வேண்டாம்" என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
Recommended Video

தேர்தல்
மேலும் சிலரோ, "நல்ல விஷயம், ஸ்டாலின் சொல்கிறார், எடப்பாடி செய்கிறார்.. வருகிற தேர்தலில் மீண்டும் முதல்வராக எடப்பாடியே வரட்டும்.. தேவையில்லாமல் திமுக எதற்கு? பணம் காசு செலவு செய்து கால நேர விரயத்தையும் தடுக்கலாமே?" என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். "ஆக, திமுக சொல்றதை தானே, அதிமுக செய்கிறது? அப்பறம் ஏன் அதிமுக சரியாக செயல்படவில்லை என்று திமுக கூறுகிறது?" என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. ஆனால் இதனால் சோஷியல் மீடியா முழுவதுமே அதிமுக - திமுக கட்சிகள் அதகளப்படுத்தி வருகின்றன!
-
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications