அதிர வைத்த பறை.. ஓங்கி ஒலித்த இசை.. இது கவுசல்யா வாழ்வின் போராட்ட கீதம்!
உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து கணவர் சக்தியுடன் பறையிசைத்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video

சென்னை: உடுமலைபேட்டை கவுசல்யா மறுமணம் செய்ததை தொடர்ந்து கணவர் சக்தியுடன் பறையிசைத்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
சாதி ஆணவத்தால் உடுமலை பேட்டையை சேர்ந்த கவுசல்யாவின் கணவர் சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். தனியாக சட்ட போராட்டம் மூலம் போராடிய கவுசல்யா குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தார்.
அதன்பின் இன்று கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.

மரியாதை செய்தனர்
இதையடுத்து தம்பதிகள் நேராக சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செய்தனர். கோவை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தனர். இந்த திருமணம் சடங்குகள் இன்றி இணையேற்பு விழா என்ற பெயரில் கருப்பு உடை அணிந்து நடந்த சுயமரியாதை திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுசல்யா இசை
அதன்பின் நிமிர்வு கலையக பறையிசை கலைஞர்களுடன் சேர்ந்து அதன்பின் கவுசல்யா பறையிசைத்தார். சக்தியும் அவர்களுடன் உடன் இருந்தார். அவர்கள் பறையை இசைத்துவிட்டு பறை கலைஞராய் பெருமை கொள்வோம் என்று கோஷமிட்டனர். இது நிகழ்வு வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

சந்தோசம்
சமூக வலைத்தளங்களில் பலர் இதை பாராட்டி இருக்கிறார்கள். கவுசல்யா இப்படி சந்தோசமாக இருப்பதை பார்க்க மகிழ்வாக உள்ளது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்போதும் கேட்கும்
'''அனல் காயும் பறையோசை, என் வாழ்வின் கீதம் ஆகிடுமே'' என்று மெட்ராஸ் படத்தில் வரும் பாடல் வரிகளை போல, இந்த பறையோசையும் கவுசல்யாவின் வாழ்க்கை கீதம் போல அங்கு ஓங்கி ஒலித்தது. இந்த ஓசை சாதிய கொடுமைகளுக்கு எதிராக என்றும் ஒலிக்கும் என்று எதிர்பார்ப்போம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications