"இந்தாங்க வெற்றிப் பரிசு".. மதுரை "எய்ம்ஸ் செங்கல்"லை.. ஸ்டாலினிடம் கொடுத்த பலே உதயநிதி!
சென்னை: தமிழகத்தில் திமுக தனிபெரும் கட்சியாக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என ஒரு செங்கலில் எய்ம்ஸ் என எழுதி பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் அந்த செங்கல்லை ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார்.
Recommended Video
அதாவது திமுக ஆட்சி வந்தாச்சு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை துரிதமாக கட்டி முடிக்க வேண்டும் என்பதை நினைவுப்படுத்தவும் அந்த செங்கல்லை உதயநிதி ஒப்படைத்திருக்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று தமிழகம் முழுவதும் 75 இடங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 140 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது.

திமுக வெற்றி
இந்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வென்றுள்ளார். அதிமுக அமைச்சர்களில் 12 பேர் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். இது போல் திமுக பெற்ற மாபெரும் வெற்றிக்கு உதயநிதியும் ஒரு காரணமாவார்.

உதயநிதி
நாடாளுமன்றத் தேர்தலில் உதயநிதி செய்த பிரச்சாரத்தின் பயனாக 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றதற்கு பரிசாக அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அது போல் தேர்தல் தொடங்குவதற்கு முன்பே விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியை உதயநிதி நடத்தினார்.

எய்ம்ஸ் செங்கல்
அதில் மிகவும் ஹைலைட்டான விஷயமே எய்ம்ஸ் செங்கல்தான். இது சாதாரண செங்கல் அல்ல. அதிமுகவையும் பாஜகவையும் இதைவிட மோசமாக யாரும் விமர்சிக்க முடியாததை உதயநிதி செய்தார். தனது பிரச்சாரங்களில் மதுரையில் 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டிக் கொடுத்தார்கள்.

கையோடு கொண்டு வந்துட்டேன்
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. அதை கையோடு எடுத்து வந்துட்டேன் என கூறி எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல்லை காண்பித்தார். உடனே அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து செங்கல்லை திருடிவிட்டதாக உதயநிதி மீது பாஜக வழக்குப் பதிவு செய்த கதையெல்லாம் உண்டு.

வேகமாக
அதாவது எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நட்டோடு சரி, ஒரு அடி உயர கட்டுமானம் கூட நடக்கவில்லை என்பதுதான் உதயநிதியின் வாதம். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேகமாக கட்டி முடிக்கப்படும் என வாக்களித்தார்.

திமுக முன்னிலை
இந்த நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. தனிபெரும் பலம் கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்கு பரிசாக எய்ம்ஸ் செங்கல்லை தனது தந்தை ஸ்டாலினிடம் உதயநிதி அளித்தார். இது தொடர்பாக புகைப்படம் வைரலாகி வருகிறது.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications