இனி கைரேகை தேவையில்லை.. வந்தாச்சு டிஜிட்டல் ஆதார் அட்டை.. இண்டெர்நெட் கூட வேண்டாம்
சென்னை: ஆதார் கார்டு இல்லாமலே அதனை மக்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆப் ஒன்றை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த ஆதார் செயலி மூலமாக இனி நாம் இண்டெர்நெட் இல்லாமலும், ஒரிஜினல் ஆதார் கார்டுக்கு பதிலாக டிஜிட்டல் ஆதார் கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.
நாட்டு மக்களின் அடையாள ஆவணங்களில் முக்கியமானதாக ஆதார் கார்டு விளங்குகிறது. அரசின் நலத்திட்டங்கள் பெறுவதில் இருந்து வங்கி கணக்கு தொடங்குவதற்கு, பான் கார்டு வாங்குவதற்கு, பாஸ்போர்ட் பெறுவதற்கு, செல்போன் எண் வாங்க என எல்லாவற்றிற்கும் இப்போது ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது.

ஆதார் கார்டு
இந்த நிலையில் ஆதார் கார்டு இல்லாமலே அதனை மக்கள் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய ஆப் ஒன்றை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலமாக இனி நாம் இண்டெர்நெட் இல்லாமலும், காகித ஆதார் அட்டை கையில் இல்லாமலும் வங்கி கணக்கு தொடங்க, செல்போன் எண் பெற என பல தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதுவரை பொதுமக்கள் ஆதாரை பயன்படுத்துவதற்கு லேமினேஷன் செய்தோ அல்லது தனியாக பைல் செய்து வைத்துக்கொண்டோ வெளியில் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். ஒரு சில இ ஆதார் மூலமாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து பயன்படுத்தி வந்தனர். இப்படி இருக்கும் போது இணையதளம் இல்லாத நேரத்திலோ அல்லது ஆதார் அட்டை இல்லாமல் இருந்தாலோ நமது அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்வது பிரச்சினையாக இருந்து வந்தது.
புதிய ஆதார் செயலி
இந்த நிலையில் தான் தற்போது புதிதாக ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்கும் நோக்கத்துடன் இந்த ஆப்பானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பினை நாம் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு, அதில் நமது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் முக அங்கீகாரம் செய்து அதனை செயலி ஏற்றுக்கொண்டால் நமது ஆதார் விவரங்கள் அதில் வந்துவிடும். பின்னர் இதை வைத்து நாம் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒரிஜினல் ஆதார் கார்டு போல
அதாவது இந்த ஒரிஜினல் ஆதார் கார்டு போலவே செல்போன் எண் பெறுவதற்கோ, வங்கி கணக்கு தொடங்குவதற்கோ, என ஆதாரை வைத்து செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் இந்த ஆப்பை வைத்து செய்துவிட முடியும். இண்டர்நெட் இல்லாத போதும் நாம் இதனை ஒரிஜினல் ஆதார் கார்டு போல பயன்படுத்தி கொள்ளலாம். கைரேகை எல்லாம் இனி வைக்க வேண்டாம்.
அந்த செயலியில் உள்ள 'கியூஆர்' கோடு காண்பித்தால் போதும். அல்லது அவர்கள் காட்டும் 'கியூஆர்' கோடினை ஸ்கேன் செய்தால் போதும். அதன் மூலம் நமது ஆதார் எண்ணை கூட அவர்களால் பார்க்க முடியாது. மேலும் இந்த செயலியில் நமது ஆதார் மட்டுமின்றி ஒரே செல்போன் எண் உள்ள நமது குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 5 பேர் ஆதார் விவரங்களை அதில் பதிவு செய்து கொள்ள முடியும்.
மூன்றடுக்கு பாதுகாப்பு
பாதுகாப்பு கருதி இந்த செயலியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக அங்கீகாரம், 6 இலக்க பின், டிஜிட்டல் பாஸ்வேர்டு என நம் தேவைக்கு ஏற்ப எதாவது ஒரு செக்யூரிட்டி பாஸ்வேர்டை போட்டுக்கொள்ளலாம். ஆதார் கார்டை கையில் தூக்கிக்கொண்டு செல்லாமல் இந்த செயலியை பயன்படுத்தியே ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு மேலும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications