Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி 20 - 28 டிகிரி தான் வைக்க முடியும்.. ஏசிக்கு வரும் கட்டுப்பாடு.. ஏன்? உலக நாடுகளில் இப்படி ஒரு ரூல்ஸ் உள்ளதா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏசிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வீடுகள் மற்றும் கமர்ஷியல் வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும் ஏ.சிக்களில் வெப்ப நிலையை குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் குறையாமலும், அதிகபட்சம் 28 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்கும் வரையில் விதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏன் இப்படியான ஒரு விதியை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது என்றும், இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்றும், வெளிநாடுகளில் எந்த மாதிரி ரூல்ஸ் உள்ளது என்றும் இங்கு பார்க்கலாம்.

இந்தியாவில் சமீப காலமாக ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. மாறிவரும் பருவ நிலை காரணமாக தற்போது வெப்பம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்களிடையே ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. பெரும் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் காணப்பட்ட ஏசி தற்போது நடுத்தர வசதி கொண்ட மக்களின் வீடுகளை கூட அலங்கரிக்கின்றன.

understanding-indias-new-ac-rules-and-how-they-stack-up-globally

20 டிகிரிக்கு கீழ் குறைக்க முடியாது

சொல்லப்போனால் ஏசி இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது என இன்னும் சில வருடங்களில் சொல்ல வேண்டிய நிலை வந்துவிடும் என நினைக்கும் அளவிற்கு ஏசி பயன்பாடு பெருகியுள்ளது. தற்போதுள்ள ஏசிக்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை 16 டிகிரியாகவும் அதிகபட்ச வெப்ப நிலை 32 வரையிலும் வைக்க முடியும். இதில்தான் முக்கிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, இனி அறிமுகம் செய்யப்படும் ஏசிக்களில் அதிகபட்ச வெப்ப நிலையை 28 டிகிரிக்கு மேல் வைக்க முடியாத அளவிலும் குறைந்தபட்ச வெப்ப நிலை 20 டிகிரிக்கு கீழ் குறைக்க முடியாத அளவுக்கும் மாற்றப்பட இருப்பதாகவும் விரைவில் இது அமல்படுத்த இருப்பதாகவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியிருந்தார்.

புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வரும்

இதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்கவும், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் அளவைக் குறைக்கவும் முடியும் என்று சொல்லப்படுகிறது. வீடுகள் மற்றும் வணிக இடங்களில் மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் குறிப்பாக, இந்தியாவில் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், கடுமையான வெப்ப அலைகளும் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் மனோகர் லால் கட்டார் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஏசிக்களுக்கான புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வரும். ஏசிக்களின் வெப்பநிலை 20°C முதல் 28°C வரை இருக்க வேண்டும். அதாவது, 20°C-க்குக் குறைவாகவோ அல்லது 28°C-க்கு மேலாகவோ குளிர்விக்கவோ, சூடாக்கவோ முடியாது."குறைந்த வெப்பநிலையில் ஏர் கண்டிஷனர்களை வைப்பதால் ஏற்படும் அதிக மின்சார பயன்பாடு மற்றும் சரியாகக் குளிர்விக்காத பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு "முக்கியமான நடவடிக்கை" என்றார்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கிறது

மத்திய அரசின் இந்த புதிய விதியை அமல்படுத்தினால், ஏசி தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் சாதனங்களை மாற்றியமைக்க வேண்டும் அல்லது மென்பொருள் மூலம் அப்டேட் செய்ய வேண்டும். எரிசக்தியைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், ஏர் கண்டிஷனர்களின் பயன்பாடு அதிகரிப்பதாலும், கோடை காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது.

ஏர் கண்டிஷனர்கள் குறைந்த வெப்பநிலையில் இயங்கும்போது, மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அதிக சுமை ஏற்படுகின்றன.. எரிசக்தி திறன் பணியகத்தின் (BEE) கூற்றுப்படி, பெரும்பாலான இந்தியர்கள் ஏர் கண்டிஷனர்களை 20-21°C-ல் பயன்படுத்துகின்றனர். இது தேவையானதை விடக் குறைந்த வெப்ப நிலையாகும். இதனால் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதுடன், நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும்போது வெளியாகும் நச்சுப் புகை சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கிறது.

மின்சார பயன்பாடு 6% குறையும்

குறைந்தபட்ச குளிர்விக்கும் வெப்பநிலையை 20°C ஆகவும், அதிகபட்ச வெப்பமூட்டும் வெப்பநிலையை 28°C ஆகவும் வைப்பதன் மூலம், எரிசக்தியைச் சேமிக்கவும், மின்சார நிலையங்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கவும், அரசு திட்டமிட்டுள்ளது.
ஏர் கண்டிஷனர்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளை நீண்ட காலமாக
எரிசக்தி திறன் பணியகம், வழங்கி வருகிறது. ஏசி இயந்திரங்களில் வெப்பநிலையை ஒரு டிகிரி உயர்த்தினால், மின்சார பயன்பாடு சுமார் 6 சதவீதம் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, வெப்பநிலையை 20°C-ல் இருந்து 24°C ஆக உயர்த்தினால், 24 சதவீதம் வரை சேமிக்க முடியும். கோடை காலத்தில் இது வீடுகளுக்குக் குறைந்த மின்சாரக் கட்டணத்தையும், நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களுக்குக் குறைந்த சுமையையும் ஏற்படுத்தும்.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை என்ன?

ஏசி வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் உலக நாடுகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் புதிய விதிமுறைகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சில நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற விதிகளை அமல்படுத்தியுள்ளன. சில நாடுகளில் இது அரசு உத்தரவாகவும், சிலவற்றில் பொதுவான வழிகாட்டுதலாகவும் உள்ளது. குறிப்பாக, பொது இடங்கள் மற்றும் வணிக கட்டிடங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக இருப்பதால், அங்கு இந்த விதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கோடை காலத்தில் ஏர் கண்டிஷனர்களை 28°C-ல் வைத்து பயன்படுத்தவேண்டும் என்று ஜப்பான் சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக அலுவலகங்களில். இது பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும், நிறுவனங்கள் இதை பின்பற்றுவதன் மூலமும் செயல்படுத்தப்படுகிறது. எனினும், இது ஒரு அறிவுறுத்தலாக மட்டுமே உள்ளது.

மீறுவோருக்கு அபராதம்

ஸ்பெயின் 2022 ஆம் ஆண்டு இவ்விவகாரத்தில் கடுமையான முடிவு ஒன்றை எடுத்தது. அதன்படி, பொது கட்டிடங்கள், அலுவலகங்கள் மற்றும் கடைகளில் 27டிகிரி செல்சியஸ்க்கு கீழ் குறைக்க கூடாது என்று சட்டம் கொண்டு வந்தது. மின்சார செலவுகள் அதிகரித்ததாலும், காலநிலை மாற்றம் பற்றிய கவலைகள் அதிகரித்ததாலும், எரிசக்தியைச் சேமிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விதி கொண்டுவரப்பட்டது.

அமெரிக்காவில், சட்டப்பூர்வமாக ஏசி இத்தனை டிகிரியில் வைக்க வேண்டும் என்ற கட்டாய விதி இல்லை. எனினும், எனர்ஜி ஸ்டார் திட்டத்தின் படி, வீடுகளில் ஏர் கண்டிஷனர்களை 25.5°C (78°F) ஆக வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும், சலுகைகள் வழங்குவதன் மூலமும் இதை மக்களின் நடைமுறைக்கு கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறது. சீனாவில் அரசு கட்டிடங்களில் குறைந்தபட்ச குளிர்விக்கும் வெப்பநிலையை 26°C ஆக வைக்கும் விதியை அமல்படுத்துகிறது. கோடை காலத்தில், இந்த விதி கட்டாயம் ஆகும்.. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+