கருணாநிதி பிறந்த ஜூன் 3 இனி செம்மொழி நாளாக கொண்டாடப்படும்.. சட்டசபையில் வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதி தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன். அவர் இன்று சட்டசபையில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25ம் நாள் தாய் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்.
அடுத்த ஆண்டு முதல் ஜூன் மூன்றாம் தேதி செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும்.
பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி, மாவட்ட மாநில அளவில் நடத்தி பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்காக ஒரு கோடியே 88 லட்சத்து 57 ஆயிரம் வழங்கப்படும்.
தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமை தொகைக்கென ரூபாய் 91 லட்சத்திலிருந்து 35 ஆயிரம் வழங்கப்படும்.
டெல்லி தமிழ் சங்கத்தின் கலையரங்கத்தில் தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் நூலை பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் செலவினத்திற்கு ரூபாய் 11 லட்சத்து 55 ஆயிரம் வழங்கப்படும்.
ஜனவரி 25ம் நாளினை தமிழ்மொழித் தியாகிகள் நாள் என பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்படும் ரூபாய் 17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.
வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருச் சிலை நிறுவிட ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்.
சண்டிகர் தமிழ் மன்றம் கட்டிட விரிவாக்க பணிக்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications