அப்பா இறந்த நாளும், எனது ஜெர்சி நம்பரும் ஒன்று.. பிளாஷ்பேக் சொன்ன விராட் கோலி!
சென்னை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, எப்போதும் தனது ஜெர்சி எண்ணை 18ஆக மட்டுமே வைத்துக் கொள்வதற்கான காரணத்தை கூறியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. 2008ஆம் ஆண்டு யு-19 கிரிக்கெட் கேப்டனாக தொடங்கிய இவரது பயணத்தை யாராலும் தடுக்க முடியவில்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 75 சதங்கள் விளாசியுள்ள விராட் கோலி, 25 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால் சர்வதேச கிரிக்கெட்டில் கோலிக்கு நிகரான வீரர்கள் யாருமில்லை என்றே பார்க்கப்படுகிறது.

விராட் கோலி விளக்கம்
ஒவ்வொரு முறையும் விராட் கோலி அணிந்திருக்கும் ஜெர்சி நம்பரை கேமராவில் காட்டினால் கூட ரசிகர்களின் ஆரவாரம் உச்சத்தை தொடும். அந்த அளவிற்கு இந்திய ரசிகர்களின் உணர்வோடு விராட் கோலி கலந்துள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் சூழலில், விராட் கோலி தனது ஜெர்சி எண் 18 குறித்து சில முக்கியத் தகவல்களை பேசியுள்ளார்.

ஜெர்சி எண் ’18’
விராட் கோலியிடம் ஜெர்சி எண் 18ஐ தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று கேள்வி எழுப்பிய போது, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஜெர்சி எண் 18ஐ நான் கேட்கவே இல்லை. நான் முதல்முறையாக எனக்கு யு-19 ஜெர்சி கொடுக்கப்பட்ட போது, அதில் 18 என்ற எண் தான் இருந்தது. அதேபோல் நான் முதல்முறையாக இந்திய அணிக்காக அறிமுகமானதும் ஆகஸ்ட் 18 தான்.

தந்தை மறைந்த நாள்
அதுமட்டுமல்லாமல் எனது தந்தை உயிரிழந்தது 18ம் தேதி தான். அதனால் அது சாதாரண எண் அல்ல. அந்த எண் என்னுடன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் தந்தை 2006ஆம் ஆண்டு டிசம்பர 18ஆம் தேதி உயிரிழந்தார்.

வாழ்வை மாற்றிய தருணம்
அப்போது 17 வயதில் டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலிக்கு பேரிடியாக அமைந்தது. பின்னர் தந்தையின் இறுதிசடங்கில் பங்கேற்ற விராட் கோலி, அடுத்த நாளே களம் திரும்பினார். அந்தப் போட்டியில் விராட் கோலி டெல்லி அணிக்காக 90 ரன்களை விளாசினார். இதுகுறித்து விராட் கோலி கூறுகையில், தந்தை மறைந்த மறுநாள் நான் கிரிக்கெட் விளையாடியது தான் என் வாழ்க்கையை மாற்றியது என்று தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications