அமலுக்கு வந்த புதிய பென்சன் முறை.. இனிமேல் உங்களின் பென்சன் இவ்வளவுதான்! மத்திய அரசின் புது பார்முலா
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்காக அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
இது முன்பு அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்) மற்றும் தற்போது அமலில் உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) ஆகிய இரண்டின் முக்கிய அம்சங்களை ஒருங்கே உள்ளடக்கியது. சரி இந்த பென்சன் முறையில் பென்சன் எப்படி கணக்கிடப்படும்.. உங்களுக்கு எவ்வளவு பென்சன் வரும் என்று தெரிய வேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள். ஊழியர் செலுத்த வேண்டிய பங்களிப்பு, ஓய்வூதியத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் பார்முலா மற்றும் அதிக பென்சன் பெறுவதற்கான தகுதிகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.

புதிய பென்சன்: ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச சேவை காலம்:
குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சேவை செய்திருந்தால் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். UPSல் உறுதிப்படுத்தப்பட்ட அதிக ஓய்வூதியம் பெற 25 வருடங்கள் வேலை செய்ய வேண்டும். ஓய்வுபெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தின் 50% வழங்கப்படும்.
புதிய பென்சன்: ஓய்வூதியத்தை எப்படி கணக்கிடுவது?:
1. 10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம்: பணி ஓய்வு நேரத்தில், பணியாளருக்கு ஏதேனும் ஊதியம் வழங்கப்படுமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பான விளக்கம் எதுவும் இல்லை.
2. சேவைக் காலம் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக ஆனால் 25 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால்: பணியாளர் விகிதாசார ஓய்வூதியத்திற்கு.. அதாவது குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருக்கலாம். யுபிஎஸ் திட்டமானது குறைந்தபட்சம் 10 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் போது மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 என்ற உறுதியான ஓய்வூதியத்தை வழங்குகிறது.
மேற்கண்ட ஓய்வூதியம் பின்வருமாறு கணக்கிடப்படும்: கடந்த 12 மாதங்களுக்கான சராசரி மாத அடிப்படை ஊதியம் x 50% x வேலை பார்த்த வருடங்களின் எண்ணிக்கை) / 25 ஆண்டுகள்.
3. அதுவே 25 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால் அதில் ஓய்வூதியம் எளிதாக கணக்கிடலாம். இதில் பணியாளரின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமானது கடந்த 12 மாதங்களின் சராசரி மாத அடிப்படை ஊதியத்தில் 50% ஆக இருக்கும். அதைக் கணக்கிடுவதற்கான பார்முலா: கடந்த 12 மாதங்களுக்கான சராசரி மாத அடிப்படை ஊதியம் x 50%.
புதிய பென்சன்: ஓய்வூதியம் எவ்வளவு?
உதாரணமாக ஆகஸ்ட் 31, 1999 இல் பிறந்த ஒரு நபர், ஆகஸ்ட் 31, 2024 அன்று மத்திய அரசின் வேலைக்கு சேருகிறார் என்று வைத்துக்கொள்வோம். 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஆகஸ்ட் 31, 2059 அன்று ஓய்வு பெறுகிறார். மேலும், அவரை கடைசி 12 மாதங்களில் (ஓய்வு பெறுவதற்கு முன்) சராசரி மாத அடிப்படை ஊதியம் ரூ. 1.3 லட்சம் பெறுகிறார். ஓய்வூதியம் பெறும் ஆண்டு பணவீக்கக் குறியீடு 4.5% என்றும் வைத்துக்கொள்வோம்.
ஊழியர் 25 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை முடித்திருப்பதால், அவரது ஓய்வூதியத் தகுதி கடைசி 12 மாதங்களின் சராசரி மாத அடிப்படை ஊதியத்தில் 50% ஆக இருக்கும். சராசரி மாத அடிப்படை ஊதியம் ரூ. 1.3 லட்சமாக இருந்தால், ஓய்வு பெறும்போது மாத ஓய்வூதியம் ரூ.65,000 (ரூ. 1,30,000 x 50%) ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications