Union Budget 2026 - 27: நாடே எதிர்பார்த்த மத்திய பட்ஜெட்.. உருவாக்கிய அதிகாரிகள் யார் யார் தெரியுமா?
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 9வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. நாடே எதிர்பார்த்த இந்த பட்ஜெட்டை உருவாக்கிய அதிகாரிகள் யார் யார்? அவர்கள் என்னென்ன பணியை செய்தனர் என்ற விவரங்களை இங்கு காணலாம்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை உருவாக்கும் வகையில் 2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்தார். அவரது உரை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
இதில் பொது மூலதனச் செலவினம் 2026-27 நிதியாண்டில் ரூ.12.2 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட் தயாரிப்பில் இடம்பெற்ற அதிகாரிகள் யார் யார் என்ற விவரங்களை இங்கு காணலாம்.

அனந்த நாகேஸ்வரன்
நாட்டின் 18-வது தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) ஆக உள்ள வி. அனந்த நாகேஸ்வரன், மத்திய பட்ஜெட் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நபர்களில் ஒருவராக உள்ளார். கடந்த 2022 ஆம் அண்டு அனந்த நாகேஸ்வரன் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
மத்திய நிதியமைச்சருக்கு பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கும் முக்கிய பொறுப்பு இவருக்கு உள்ளது. அனந்த நாகேஸ்வரனின் பதவிக்காலம் 2027 மார்ச் மாதத்தில் முடிவடைய உள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை தயாரிக்கும் பொறுப்பு இவருடையதே ஆகும். நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கைதான்.. பட்ஜெட்டிற்கு முன்பாக சமர்பிக்கப்படும்.
அனுராதா தாக்கூர்
மத்திய பட்ஜெட்டின் மொத்த வடிவமைப்பை உருவாக்கும் முக்கிய பொறுப்பை வகிப்பவர் தான் பொருளாதார விவகாரங்கள் செயலாளர்தான். இந்த பொறுப்பில் தற்போது அனுராதா தாக்கூர் உள்ளார். இவர் மத்திய பட்ஜெட் பிரிவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த பிரிவே நாட்டின் மேக்ரேஎகனாமிக் திட்டங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தயாரிக்கும் பொறுப்பை வகிக்கிறது.
வருவாய் செயலர்: அரவிந்த் ஸ்ரீவஸ்தவா
வருவாய் துறை செயலராக அரவிந்த் ஸ்ரீவஸ்தவா பதவியேற்ற பிறகு தாக்கலாகும் முதல் பட்ஜெட் இதுவாகும். மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் வரி தொடர்பான முன்மொழிவுகள், அதாவது நேரடி வரிகள் மற்றும் மறைமுக வரிகள் இரண்டிற்கும் பொறுப்பு இவர்தான்.
செலவின செயலர்:
நாட்டின் செலவின செயலாளராக உள்ள வும்லுன்மாங் வுவால்னம் இந்திய அரசின் செலவுகள் தொடர்பான பணிகளை கவனித்து வருகிறார். இதில், அரசுத் திட்டங்களின் செயல்படுத்தல் மற்றும் மானியங்களைச் சீரமைத்தல் உள்ளிட்டவை அடங்கும். மேலும், பட்ஜெட் பற்றாக்குறையை கட்டுப்படுத்துதல் மற்றும் இந்தியாவின் நிதி ஒழுங்குமுறையை பராமரித்தல் உள்ளிட்ட முக்கிய பங்கையும் இவரே வகிக்கிறார்.
நிதிசேவைகள் செயலர்:
நிதி சேவைகள் துறை செயலராக இருப்பவர் எம் நாகராஜு. பொதுத்துறை நிதி அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பை இவரே வகிக்கிறார். அதாவது இன்ஸுரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகள், மற்றும் பென்சன் நிறுவனங்கள் சமூக பாதுகாப்பு திட்டங்கள், கடன் விரிவாக்கம் உள்ளிட்டவற்றையும் இவரது துறையே கண்காணித்து வருகிறது.
இவர்கள் தவிர பொதுச்சொதுக்கள் நிர்வாகத்துறை செயலராக இருக்கும் அருணிஷ் சாவ்லா, பொது நிறுவனங்கள் துறை செயலராக உள்ள மோசஸ் சலாய் உள்ளிட்டோரும் பட்ஜெட் தயாரிப்புக்கு பின்னால் உள்ளவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications