கொஞ்சம் மிஸ் ஆனாலும்.. உங்களுக்கு பென்சன் வராது.. நாடு முழுக்க.. மத்திய அரசு அனுப்பிய மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான மெசேஜ் ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டு வாழ்நாள் சான்றிதழை நவம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் மாதத்திற்குள் தங்கள் வருடாந்திர வாழ்க்கைச் சான்றிதழைத் தாக்கல் செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ளது.

jobs job old pension scheme pension

ஜீவன் பிரமன் என்றால் என்ன?

ஜீவன் பிரமான் என்பது ஐடி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக்-முறை மூலம் செய்யப்படும் டிஜிட்டல் லைஃப் சான்றிதழாகும். ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதை வருடா வருடம் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் மட்டுமே அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படும். பென்ஷன் மூலம் செய்யப்படும் முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறது.

முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை எவ்வாறு பெறுவது?

உங்களிடம் குறைந்தபட்சம் 5MP முன்பக்கக் கேமராவும் இணைய இணைப்பும் உள்ள ஸ்மார்ட்ஃபோன் இருப்பதை உறுதிசெய்யவும்.
வங்கி, தபால் அலுவலகம் அல்லது பிறவற்றை உள்ளடக்கிய ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்தில் உங்கள் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் டிஜிட்டல் லைஃப் சான்றிதழைப் பெறுவதற்கு ஆதார் எண் அல்லது விஐடி அவசியம்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 'ஆதார்ஃபேஸ்ஆர்டி’ மற்றும் 'ஜீவன் பிரமன் ஃபேஸ் ஆப்’ ஆகியவற்றைப் பதிவிறக்கி நிறுவவும்.
உங்களின் log in ஐ பதிவு செய்து, உங்கள் முகத்தை ஸ்கேன் செய்யவும்.
அனைத்து ஓய்வூதியதாரர் விவரங்களையும் நிரப்பவும்.
முன்பக்கக் கேமராவில் புகைப்படம் எடுத்துச் சமர்ப்பிக்கவும்.
ஜீவன் பிரமான் டிஜிட்டல் லைஃப் சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான இணைப்புடன் கூடிய SMS உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்கவும்.

இதன் மூலம் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டு வாழ்நாள் சான்றிதழை நவம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஓய்வூதிய மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்காக அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இது முன்பு அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்) மற்றும் தற்போது அமலில் உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) ஆகிய இரண்டின் முக்கிய அம்சங்களை ஒருங்கே உள்ளடக்கியது. சரி இந்த பென்சன் முறையில் பென்சன் எப்படி கணக்கிடப்படும்.. உங்களுக்கு எவ்வளவு பென்சன் வரும் என்று தெரிய வேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள்!

ஏப்ரல் 1, 2025 முதல் யுபிஎஸ் பென்சன் முறை நடைமுறைக்கு வரும். ஊழியர் செலுத்த வேண்டிய பங்களிப்பு, ஓய்வூதியத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் பார்முலா மற்றும் அதிக பென்சன் பெறுவதற்கான தகுதிகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.

ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச சேவை காலம்:

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சேவை செய்திருந்தால் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். UPSல் உறுதிப்படுத்தப்பட்ட அதிக ஓய்வூதியம் பெற 25 வருடங்கள் வேலை செய்ய வேண்டும். ஓய்வுபெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தின் 50% வழங்கப்படும்.

ஓய்வூதியத்தை எப்படி கணக்கிடுவது?:

1. 10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம்: பணி ஓய்வு நேரத்தில், பணியாளருக்கு ஏதேனும் ஊதியம் வழங்கப்படுமா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பான விளக்கம் எதுவும் இல்லை.

2. சேவைக் காலம் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக ஆனால் 25 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால்: பணியாளர் விகிதாசார ஓய்வூதியத்திற்கு.. அதாவது குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருக்கலாம். யுபிஎஸ் திட்டமானது குறைந்தபட்சம் 10 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் போது மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 என்ற உறுதியான ஓய்வூதியத்தை வழங்குகிறது.

மேற்கண்ட ஓய்வூதியம் பின்வருமாறு கணக்கிடப்படும்: கடந்த 12 மாதங்களுக்கான சராசரி மாத அடிப்படை ஊதியம் x 50% x வேலை பார்த்த வருடங்களின் எண்ணிக்கை) / 25 ஆண்டுகள்.

3. அதுவே 25 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால் அதில் ஓய்வூதியம் எளிதாக கணக்கிடலாம். இதில் பணியாளரின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமானது கடந்த 12 மாதங்களின் சராசரி மாத அடிப்படை ஊதியத்தில் 50% ஆக இருக்கும். அதைக் கணக்கிடுவதற்கான பார்முலா: கடந்த 12 மாதங்களுக்கான சராசரி மாத அடிப்படை ஊதியம் x 50%.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+