நாடு முழுக்க பல ஆயிரம் பேருக்கு.. மத்திய அரசு திடீரென அனுப்பிய பணம்.. யாருக்கெல்லாம் வரும்? பின்னணி
சென்னை: மத்திய அரசின் பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா (PMSGMBY) திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக அனுப்பப்பட்டு வந்த இந்த நிதி, தற்போது முழுமையாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகத்தின் தகவல்படி, PMSGMBY திட்டம் சூரிய ஆற்றலை மலிவான விலையில் வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. 2025 செப்டம்பர் நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகள் (PSB) 5.79 லட்சத்திற்கும் அதிகமான கடன் விண்ணப்பங்களை ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் ₹10,907 கோடி ஆகும்.

பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா (PMSGMBY)
இந்த நிதி திட்டம், கூரை மேல் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான கடன்களை வழங்குகிறது. திட்டத்திற்கான கடன்கள், ஜனசமர்த் போர்ட்டல் வழியாக நிர்வகிக்கப்படுகின்றன. இது pmsuryaghar.gov.in என்ற தேசிய போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகள் டிஜிட்டல் முறையில் எளிதாகவும், வெளிப்படையாகவும் விண்ணப்பிக்க உதவுகிறது.
இந்த கடன் திட்டம் பல குறிப்பிடத்தக்க பலன்களை வழங்குகிறது. ₹2 லட்சம் வரையிலான கடன்கள், குறைந்த வட்டி விகிதத்தில், பிணையம் இல்லாமல் வழங்கப்படுகின்றன. மின்சார செலவு சேமிப்புக்கு ஏற்றவாறு நீண்ட கால திருப்பி செலுத்தும் சலுகையும், கடன் விநியோகத்தில் இருந்து 6 மாத சலுகைக் காலமும் இதில் அடங்கும்.
இதேபோன்ற திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், https://www.pmsuryaghar.gov.in/ அல்லது https://www.tnebltd.gov.in/usrp/applycfa.xhtml ஆகிய இணைப்புகள் மூலம் சூரிய மின்சக்தி பேனல்களை நிறுவ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய ஆற்றலை மலிவான விலையில் விற்கும் திட்டம்
தமிழ்நாட்டில் கூரை மேல் சூரிய மின்சக்தி பேனல்கள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. வீட்டிற்குத் தேவையான சூரிய கூரை திறனைக் கணக்கிடுவதற்கான செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மின்சார கட்டணம் இல்லாமல் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
கூரை மேல் சூரிய மின்சக்தி அமைப்புகள் மூலம் மின்சாரம் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, 1 kW க்கு ₹30,000, 2 kW க்கு ₹60,000, மற்றும் 3 kW க்கு ₹78,000 வரை மானியம் வழங்கப்படும்.
பூமியை பசுமையாக வைத்திருக்க உதவுங்கள் என்றும், இணையதளத்தில் முதலில் பதிவு செய்து விண்ணப்பிக்குமாறும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம், வீட்டில் உள்ள தனியார் அல்லது அரசு உதவியுடன் கூரை மேல் சோலார் அமைப்பதை ஊக்குவிக்கிறது.
பொதுவாக, கூரை மேல் சோலார் அமைப்பதற்கு சதுர அடியைப் பொறுத்து ₹50,000 முதல் ₹2-3 லட்சம் வரை செலவாகும். இந்த அமைப்புகள் பெரும்பாலும் வீட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மழைக்காலம் அல்லது பனிக்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டுமே மின்சார வாரியத்தின் சப்ளை தேவைப்படும்.
கூரை மேல் சோலார் அமைத்திருப்பதை அரசிடம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால், அந்த குறைந்தபட்ச மின்சாரத் தேவையை அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டமாகும் இது. பொதுவாக, கூரை மேல் சோலார் இருந்தால், மாதம் 100 யூனிட் மின்சாரம் கூட தேவைப்படாது, ஆனால் 300 யூனிட் வரை இலவசமாகப் பயன்படுத்த முடியும்.
கூரை மேல் சோலார் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாகவே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications