காவிரி: தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய காவிரி நீரும் திறந்துவிட்ட அளவும் இதுதான்!
சென்னை: காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூலை மாதம் 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்; ஆனால் ஜூலை 18-ந் தேதி வரை 1.071 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா கொடுத்திருக்கிறது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய காவிரி நீர் அளவு தொடர்பாக ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி இருந்தார்.

இது தொடர்பான வைகோவின் கேள்விகள்: உச்சநீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆறு மாதங்களில் கர்நாடகா மாநிலம் தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்ட நீரின் அளவு, மாதம் வாரியாக எவ்வளவு? ஒப்பந்தத்தின்படி முழு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்துவதற்காக தமிழ்நாடு அரசிடமிருந்து இந்திய ஒன்றிய அரசுக்கு கோரிக்கைகள் ஏதுவும் வந்துள்ளனவா? வந்திருந்தால், அமைச்சகம் தெரிவித்த பதில் என்ன?
முந்தைய மாதங்களில், தமிழக டெல்டா பகுதி பாசனத் தேவைக்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடவதற்காக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா?
வைகோவின் கேள்விகளுக்கு நீர்வளத்துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு அளித்த பதில்கள்:
16.02.2018 தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, கர்நாடகா மாநிலம் தமிழகத்துடன் மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில், அதாவது பில்லிகுண்டுலுவில் 177.25 டிஎம்சி தண்ணீரை ஒரு சாதாரண ஆண்டில் விடுவிக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களில் பில்லிகுண்டுலுவிலிருந்து காவிரி ஆற்றில் திறந்துவிட்ட நீரின் அளவு வருமாறு:
ஜனவரி 2023 வழங்க வேண்டிய நீர் 2.76, வழங்கிய நீர் 7.375.
பிப்ரவரி 2023 வழங்க வேண்டிய நீர் 2.50, வழங்கிய நீர் 4.512.
மார்ச் 2023 வழங்க வேண்டிய நீர் 2.50, வழங்கிய நீர் 4.305
ஏப்ரல் 2023 வழங்க வேண்டிய நீர் 2.50, வழங்கிய நீர் 2.992
மே 2023 வழங்க வேண்டிய நீர் 2.50, வழங்கிய நீர் 8.467
ஜூன் 2023 வழங்க வேண்டிய நீர் 9.19, வழங்கிய நீர் 2.833
ஜூலை 2023 வழங்க வேண்டிய நீர் 31.24, வழங்கிய நீர் 1.071 (18.07.2023 நிலவரப்படி)
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் - நீர்வளத்துறையின் செயலாளரிடமிருந்தும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) தலைவரிடமிருந்தும், ஜூலை மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரை 10 நாள்களில் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறும், அதேபோன்று ஜூன் மாதத்தில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை உடனடியாகச் சரி செய்யுமாறும் 03.07.2023 அன்று கடிதம் பெறப்பட்டது.

03.07.2023 தேதியிட்ட மற்றொரு கடிதம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரிடமிருந்தும் பெறப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரிய இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தால் மாற்றி அமைக்கப்பட்ட தீர்ப்பின்படி, நடப்பு 2023-24 ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீரை பில்லிகுண்டுலுவிலிருந்து சரியான நேரத்தில் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க 04.07.2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டது.
ஜூலை 14, 2023 அன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் (CWRC) 82வது கூட்டத்திலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. 01.06.2023 முதல் 12.07.2023 வரை பில்லிகுண்டுலுவில் ஒட்டுமொத்த நீர் இருப்பு 3.379 டி.எம்.சி. மட்டுமே என்று இக்குழு தெரிவித்தது. வரும் மாதங்களில் பில்லுகுண்டுலுவில் இருந்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவை முறையாக வழங்கிட வேண்டும் என்று கர்நாடக அரசை இக்குழு கேட்டுக்கொண்டது. இவ்வாறு மத்திய அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு தெரிவித்தார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications