Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி சம்பள உயர்விற்கு.. புதிய பார்முலா.. அரசு ஊழியர்களுக்கு கொட்ட போகும் தங்கம்.. மத்திய அரசு அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 8வது மத்திய ஊதியக் குழு தனது பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும், அதை புதிய குழு எப்படி அறிவிக்கும் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல யூகங்கள் பரவுகின்றன. இந்த யூகங்கள் அனைத்தும் தவறாக வாய்ப்புள்ளது; ஏனெனில், அரசு மறைமுகமாகத் தெரிவித்துள்ளபடி, 8வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை உருவாக்க மத்திய அரசு தனக்கென ஒரு புதிய வழிமுறையையும் நடைமுறையையும் வகுக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, புதிய வழிமுறைக்கான சாத்தியக்கூறை உறுதி செய்தார். அப்போது அவர், "8வது மத்திய ஊதியக் குழு அதன் பரிந்துரைகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் நடைமுறைகளையும் தானே உருவாக்கும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

narendra modi dearness allowance

8வது ஊதியக்குழு

8வது ஊதியக் குழுவின் கீழ் புதிய பார்முலா உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இதை பணிகள் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளை அரசு பரிசீலிக்குமா என்ற கேள்விக்கே சவுத்ரி பதிலளித்தார். ஆய்வுக் குழுவின் வரம்புகள் அறிவிக்கப்பட்டபின், அகவிலைப்படி-அடிப்படை ஊதிய இணைப்பு, ஓய்வூதியர்களுக்கு சீரான ஊதிய நிர்ணய காரணி, 2026 ஜனவரி 1 முதல் பரிந்துரைகளை உரிய நேரத்தில் அமல்படுத்துதல் போன்ற பல கோரிக்கைகளை பல்வேறு அமைப்புகள் முன்வைத்துள்ளன.

நிதித்துறை இணையமைச்சரின் இந்தக் கருதுக்கப்படும், மேற்கண்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் 8வது ஊதியக் குழுவே பதிலளிக்கும். இந்தக் குழு தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க சுமார் 18 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். கடந்தகால ஊதியக் குழுக்கள் முந்தைய வழிமுறைகளை எப்போதும் மறுசீரமைத்துள்ளதால், இந்த முறையும் சம்பள உயர்வு பார்முலா மாற்றப்படலாம்.
என்கிறார்களா

உதாரணமாக, 7வது ஊதியக் குழு, படிகளின் முழு அமைப்பையும் விரிவாக ஆய்வு செய்து ஒழுங்குபடுத்தியது. மேலும், பழைய ஊதியப் பட்டைகள் (pay bands) மற்றும் தர ஊதியம் (grade pay) என்ற கருத்தை நீக்கி, ஊதிய அணி (pay matrix) என்ற முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். எனவே, இப்போக்கைப் பின்பற்றி 8வது ஊதியக் குழுவும் புதிய வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்கினால் அது ஆச்சரியமல்ல.

எட்டாவது மத்திய ஊதியக் குழு

எட்டாவது மத்திய ஊதியக் குழுவின் (8th Central Pay Commission - CPC) கீழ், 50.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது மற்றும் அதற்கான நிதி ஏற்பாடு குறித்து அரசு பின்னர் முடிவெடுக்கும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, மக்களவையில் எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளார்.

எட்டாவது ஊதியக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டது. இதன் வரையறை ஆணை (Terms of Reference - ToR) அக்டோபர் 28 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அங்கீகரிக்கப்பட்டது. நவம்பர் 3 அன்று நிதியமைச்சகம் மூலம் ஒரு தீர்மானமாக இது முறைப்படி வெளியிடப்பட்டது. குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்ட பின்னரே, அது நடைமுறைக்கு வரும் தேதி மற்றும் தேவையான நிதியை அரசு ஒதுக்கும் என பங்கஜ் சௌத்ரி தெரிவித்தார்.

8வது ஊதியக் குழு

ஊதியக் குழுவின் அமலாக்க தேதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜனவரி 1, 2026 அன்று அதை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதா என வினவப்பட்டது. ஆனால், தேதியை நிதித்துறை இணையமைச்சர் சௌத்ரி தெளிவுபடுத்தவில்லை.

யார் யார் பலனடைவார்கள் என்ற கேள்விக்கு, மத்திய அரசு தற்போது 50.14 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது என்றும், அத்துடன் சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனாளிகளாக உள்ளனர் என்றும் அமைச்சரின் பதில் குறிப்பிட்டது. இந்த நபர்கள், குழுவின் அறிவிக்கப்பட்ட வரையறை ஆணையில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு அரசு சேவைகள் மற்றும் நிறுவனங்களின் கீழ் வருகின்றனர்.

எட்டாவது மத்திய ஊதியக் குழு மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் ஊதியப் பரிந்துரைகளை வழங்குவார்கள். தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், பகுதிநேர உறுப்பினராக பேராசிரியர் புலக் கோஷ், மற்றும் உறுப்பினர்-செயலாளராக பங்கஜ் ஜெயின் ஆகியோர் பணியாற்றுவார்கள்.

விரைவில் வழங்கப்படும் பரிந்துரை

ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உருவாக்குவதற்கான வழிமுறை விரைவில் வகுக்கப்படும் என்று சௌத்ரி தெரிவித்தார். குழு அமைக்கப்பட்டு 18 மாதங்களுக்குள் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இப் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே, ஊதியக் குழு அமல்படுத்தப்படும் தேதியை மத்திய அரசு முடிவு செய்யும். ஆகவே, மத்திய அரசு ஊழியர்களும், முன்னாள் ஊழியர்களும் கூட உடனடியாக இந்த பலன்களைப் பெற மாட்டார்கள்.

அதேபோல் 69 லட்சம் ஊழியர்களுக்கு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் வருங்கால ஊதியக் குழுவின் பலன்கள் கிடைக்காது என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நிதிச் சட்டம் 2025-ன் கீழ் இந்த சலுகைகள் நிறுத்தப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது என அரசு தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய அரசு 8-வது மத்திய ஊதியக் குழுவின் (8th CPC) விதிமுறைகளை (ToR) அறிவித்ததைத் தொடர்ந்து, அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பு (AIDEF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டமைப்பு, இந்த விதிமுறைகள் 69 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களை புறக்கணிப்பதாகவும், இந்த முடிவை நியாயமற்றது மற்றும் பாகுபாடானது என்றும் சாடியுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான ஓய்வூதியதாரர்களை ஊதியக் குழுவின் வரம்பில் இருந்து விலக்குவது, வழக்கமான நடைமுறைகளுக்கு எதிரானது என்றும், அவர்களின் பலன்களை முறையாக மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பை மறுப்பதாகவும் AIDEF வலுவாக வாதிட்டுள்ளது.

நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதம்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், ஊழியர் கூட்டமைப்பு ஒரு முக்கிய அம்சத்தைக் குறிப்பிட்டது. அதாவது, 8வது மத்திய ஊதியக் குழுவின் செயல்பாட்டு விதிகளில் (ToR), ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் சேர்க்கப்படவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும். "குறிப்பாக, மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய திருத்தம் தொடர்பான செயல்பாட்டு விதிகள், 7வது மத்திய ஊதியக் குழுவுக்கு வழங்கப்பட்ட விதிகள் முற்றிலும் வேறுபடுகின்றன.. 69 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களை 8வது ஊதியக் குழுவின் வரம்புக்குள் சேர்க்காதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டிற்காக உழைத்த அவர்களை, இந்த ஊதியக் குழுவின் வரம்பில் இருந்து விலக்கி வைப்பது நியாயமல்ல" என்று கூட்டமைப்பு தெரிவித்தது.

இருப்பினும், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. "இந்தக் கூற்று தவறானது. CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021-இன் விதி 37 திருத்தப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரியும் முன்னாள் அரசு ஊழியர் ஒருவரின் நடத்தை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்டால் மட்டுமே, அவர்களின் ஓய்வூதியப் பலன்கள் பறிமுதல் செய்யப்படும்" என்று அரசு தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டது.

குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே மாற்றம்

CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021-இல் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய திருத்தம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மற்றும் நிதி அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, விதி 37(29C) என்ற ஒரு குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+