ஊடகங்கள் மீது நடவடிக்கை.. எல்.முருகன் எச்சரிக்கை.. வதந்தி கூடாது என கோரிக்கை
சென்னை: தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் எச்சரித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக தமிழக பாஜகவில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வெடித்திருந்தன. குறிப்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜகவின் ஐடி விங் செயல்பாடுகள் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

"நான் கட்சிக்காக கடுமையாக உழைக்க கூடியவள். உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன். எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்து சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கிறேன். நான் இங்கேதான் இருப்பேன்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
இது தமிழிசைக்கும், மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான மோதலாக பார்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள், மற்றொரு சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பியது. அதாவது ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு கடந்த புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
மேடையில் அமர்ந்திருந்த அமித்ஷாவுக்கு வணக்கம் வைத்துவிட்டு மேடையேறிய தமிழிசை சௌந்தர ராஜனை, அமித்ஷா அழைத்து பேசியிருந்தார். அப்போது அவருடைய முக பாவனைகள் கண்டிப்புடன் கூடியதாக இருந்ததாகவும், தமிழிசையை அவர் பொது மேடையில் வைத்து கண்டித்ததாகவும் சோஷியல் மீடியாக்களில் வைரலாக பேசப்பட்டது.
இதற்கு அமித்ஷா தரப்பிலிருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தமிழிசை தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது. அதில், "நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் சந்தித்தேன். அப்போது அவர் தேர்தலுக்கு பிந்தைய சூழல், களத்தில் உள்ள சவால்கள் பற்றி என்னிடம் கேட்டார். மேலும், அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளைக் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பான தேவையற்ற யூகங்களுக்கு விளக்கம் அளிக்கவே இதைப் பதிவிட்டுள்ளேன்" என்று ட்வீட் செய்திருந்தார்.
ஆனாலும், நெட்டிசன்கள் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து பல்வேறு மாற்று கருத்துக்களை கூறி வருகின்றனர். இது தொடர்பாக செய்தி சேனல்களிலும் விவாதங்கள் எழுந்தன.
இந்த பின்னணியில்தான் மத்திய இணையமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல்.முருகன், "தூர்தர்ஷன் என்றால் அதிகாரப்பூர்வமான செய்தி என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல மற்ற செய்தி ஊடகங்களும் இருக்க வேண்டும். பிரேகிங் செய்திக்காக தவறான செய்தியை பரப்ப வேண்டாம். அப்படி பரப்பப்படும் செய்தி ஊடகங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications