இன்று முதல் உணவகங்களை திறக்க அரசு அனுமதி... பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இன்று (திங்கள் கிழமை) முதல் உணவகங்கள், உணவு விடுதிகள் திறக்க தமிழகு அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்துள்ள அரசு , உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் புதிய விதிகள்.. என்னென்ன கட்டுபாடுகள்?
தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் முக்கியமானவை, பேருந்துகள் இயக்கம், மால்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களை திறக்க அனுமதி, உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளை திறக்க அனுமதித்துள்ளது.

அத்துடன் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்துள்ளது. எனினும் உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பதை அரசு அறிவித்துள்ளது. கீழ் கண்ட நிபந்தனைகளை பின்பற்றித்தான் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் இயங்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
- உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்
- உணவகங்கள், உணவு விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்தல் வேண்டும்.
- உணவகங்களில் நுழைவதற்கு முன் வாடிக்கையாளர்கள் கைகழுவ சோப்பு அல்லது சானிடைசர் வைத்திருப்பது கட்டாயம் ஆகும்.
- உணவகங்களில் 50 சதவிகிதம் இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
- உணவகங்களில் உணவருந்தும் மேஜைகளுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
- உணவகங்களில் குளிர்சாதன வசதி இருந்தாலும் அதை பயன்படுத்தவே கூடாது.
- உணவகங்களில் ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
- நான்கு நபர்கள் அமரும் வகையில் உள்ள இருக்கைகளில் இரண்டு நபர்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்த அனுமதிக்க வேண்டும்.
- உணவகங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5 முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.
- உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பின் நாற்காலி மற்றும் டேபிளை கிருமி நாசினி கலந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
- உணவகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக உணவகங்களில் அனுமதிக்கக்கூடாது.
- பணியாளர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
- உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
- உணவகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் உணவுப்பொருட்களை வைத்து மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
- அரசால் வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
- அரிசி, பருப்பு, காய்கறிகள், போன்றவை சமைப்பதற்கு முன் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்".
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications