யுபிஐ பரிவர்த்தனை.. தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்ய வேண்டும்? திரும்ப பெற முடியுமா?
சென்னை: இந்தியாவில் தற்போது யுபிஐ மூலமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டது. பெரும் நகரம் முதல் சிறு கிராமம் வரை அனைத்து தரப்பினராலும் யுபிஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி யுபிஐ மூலமாக பணம் அனுப்பும் போது சிலர் கவனக்குறைவாக தவறான எண்ணுக்கு பணத்தை அனுப்பி விடுகின்றனர். அப்படி பணத்தை தவறாக அனுப்பிய பணத்தை மீட்க முடியுமா? என்பது பற்றியும்அடுத்து என்ன செய்தால் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற விவரங்களை இங்கே காணலாம்.
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் யுபிஐ மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனைகள் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
சிறிய பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி உள்ளது. பயன்படுத்துவதற்கு வசதியாகவும் சில வினாடிகளில் பணத்தை அனுப்பவும் முடியும் என்பதால் வாடிக்கையாளர்கள் பலரும் ரொக்க பரிமாற்றத்தை விட யுபிஐ மூலமாக பணம் செலுத்துவதையே விரும்புகின்றனர்.

12.8 லட்சம் கோடி பரிவர்த்தனை
பண மதிப்பு இழப்பு மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்யப்படுவது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் வாலட்டுகள், பிம், யு.பி.ஐ, பேடிஎம், கூகுள் பே, பிம் ஆப், போன் பே மற்றும் பல செயலிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மிக எளிமையாக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 12.8 லட்சம் கோடி பரிவர்த்தனை யுபிஐ மூலாமக நடைபெற்றுள்ளது.

ஓட்டல், டீக்கடை, மளிகை கடைகள்
இந்த சேவைகளின் மூலம் பணத்தை பெறுவதும் அல்லது வேறொருவருக்கு பணத்தை அனுப்புவதும் மிக மிக எளிமையாக உள்ளது. இதனால் பயனர்கள் பெரும்பாலும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனையே விரும்புகின்றனர். ஓட்டல், டீக்கடை, மளிகை கடைகள் என அனைத்து இடங்களிலும் யுபிஐ மூலமாக பணம் செலுத்தும் வசதியுள்ளது. அதேவேளையில் எந்த அளவிற்கு எளிமையாக மாறுகிறதோ, அதே அளவிற்கு சில பிரச்சினைகளும் உருவாகின்றன.

தவறுதலாக அனுப்பினால்..
யு.பி.ஐ. முறையில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனையின்போது நமக்கே தெரியாமல் தவறான யு.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டால் அதனை திரும்ப பெறுவது என்பது இயலாத காரியம் தான். எனவே ஒரு வேளை நீங்கள் தவறுதலாக வேறொரு யு.பி.ஐ. கணக்கிற்கு உங்களது பணத்தை அனுப்பி விட்டால் அதனை எந்த வழிகளில் திரும்ப பெற முடியும் என்பது குறித்த விரிவான விவரங்களை இங்கே காணலாம். நீங்கள் எந்த செயலி மூலம் பணத்தை அனுப்பினீர்களோ அந்த செயலியின் உதவி குழுவை தொடர்பு கொண்டு நடந்த தவறை தெரிவிக்க வேண்டும்.

வாடிக்கையாளர் சேவை குழு
அதாவது கூகுள் பே மூலமாக பணத்தை அனுப்பினால் அதன் ஹெல்ப் செண்டரில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அனைத்து செயலிகளும் இது போன்ற பிரச்சினைகளை கையாள்வதற்காக தங்களுக்கென தனி வாடிக்கையாளர் சேவை குழுவை வைத்துள்ளன. பிம் (BHIM) எனப்படும் பாரத் இன்டர்பேஸ் பார் மணி என்ற செயலியின் இலவச வாடிக்கையாளர் உதவி எண்ணான 18001201740 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி கோர முடியும். இது பிரத்யேகமாக வாடிக்கையாளர்களின் கோரிக்கை மற்றும் புகார்களுக்கு என்று உருவாக்கப்பட்ட எண் என்பது குறிப்பிடத்தக்கது.

குறை தீர்ப்பு பிரிவில்
இந்த எண்ணை தொடர்பு கொண்டு தவறாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பான முழு விவரங்களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதேபோல் NPCI இணையதளத்தில் உள்ள குறை தீர்ப்பு பிரிவில் இந்த விவரங்களை பதிவிடலாம். இந்த இணையத்தளத்தில் பண பரிவர்த்தனை விவரங்கள், மின்னஞ்சல் மற்றும் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கு ஸ்டேட்மண்ட் ஆகியவற்றையும் இணைத்து உங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.

ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது
பணம் தவறுதலாக அனுப்பப்பட்டதை உணர்ந்து கொண்டால் ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது. அந்த யுபிஐ ஐ.டி. மற்றும் அனுப்பிய பணத்தின் மதிப்பு ஆகிய விவரங்களை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து நீங்கள் எந்த கணக்கில் இருந்து பணத்தை அனுப்பினீர்களோ அந்த வங்கியின் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வழியாக இந்த தகவல்களை அனுப்பி அவர்களிடம் உதவி கோரலாம். முடிந்த வரை வங்கியின் மேலாளரை சந்தித்தும் உதவி கேட்பதே சிறந்தது. இதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரே இடம் வங்கி மட்டுமே. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இதை செய்ய வேண்டும்.

ஒருமுறைக்கு இருமுறை
சில நேரங்களில் தவறான யு.பி.ஐ. கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது நீங்கள் தவறாக பதிவிட்ட யுபிஐ கணக்கு செயல்பாட்டில் இல்லையென்றால், உங்களது பணம் உடனடியாக உங்களது கணக்கிற்கே திரும்பி வந்துவிடும். இப்படி வந்தால் வாடிக்கையாளர்களுக்கு பெரிதாக பிரச்சினை இல்லைதான். எனவே உங்கள் பணம் உடனடியாக திரும்பவில்லை என்றால் நீங்கள் தவறுதலாக பதிவு செய்த யு.பி.ஐ. கணக்கு வேறு ஒருவருடையது என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். அந்த யுபிஐ - உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நீங்கள் செலுத்திய பணம் டெபாசிட் ஆகியிருக்கும். எனவே நீங்கள் உடனடியாக உங்கள் பணத்தை திரும்ப பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டியதுதான். எது எப்படியோ முடிந்த வரை பணத்தை யாருக்கும் அனுப்பும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை என்ன மூன்று முறை கூட நாம் பதிவிடும் ஐடி விவரங்கள் சரியானது என்பதை உறுதி செய்து அனுப்புவதே சிறந்தது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications