Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிபே யூஸ் பண்ணுறீங்களா.. யுபிஐ பரிவர்த்தனைகளில் நாளை முதல் வருது மாற்றம்! பயனர்களுக்கு பெரிய நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: யுபிஐ பயனர்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக சில முக்கியமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக நாளை முதல் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு எடுத்துக்கொள்ளும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சில வினாடிக்ளில் பயனர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். இதற்கான நடவடிக்கையை என்.பி.சி.ஐ எடுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது யுபிஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குக்கிராமம் முதல் பெரிய மெட்ரோ நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ பயன்பாடு என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இந்தியாவில் 3.15 கோடி பேர் யுபிஐ பயன்படுத்தலாம் என்று தரவுகள் சொல்கின்றன.

upi-transactions-set-to-get-faster-starting-june-16-more-updates-ahead

யுபிஐ சேவை

யுபிஐ சேவையை பொறுத்தவரை ஒரு அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு கூட சில வினாடிகளில் பண பரிவர்த்தனையை செய்ய முடிகிறது. அதேபோல கடைகளில் ஏதேனும் பொருட்கள் வாங்கினால் கூட சில வினாடிகளில் பணத்தை செலுத்திவிட்டு வந்துவிடலாம்.

கையில் ரொக்கமாக பணம் வைத்து இருக்க தேவையில்லை என்பதால், மக்களும் யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனை எளிதாக செய்து வருகிறார்கள். இதனால், யுபிஐ சேவையில் பயனர்களுக்கு ஏற்ற வகையில் அவ்வப்போது சில அப்டேட்களை யுபிஐ செய்து வருகிறது. இந்த நிலையில், பண பரிவர்த்தனையை மேலும் எளிதாக்கும் வகையில், சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

நாளை முதல் அமலுக்கு வருகிறது

அதாவது பரிவர்த்தனை வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஏற்கனவே பரிவர்த்தனை நேரம் 30 செகண்டில் இருந்து 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பேலன்ஸ் செக் செய்வதற்கான நேரமும் 30 செகண்டில் இருந்து 10 செகண்ட் ஆக குறைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்க்‌ஷன் ரிவர்ஷல் டைமும் 30 செகண்டில் இருந்து 10 செகண்ட் ஆக குறைக்கப்பட்டுள்ளது. யுபிஐ ஐடியை சரிபார்க்க விரும்பினால் அதற்கான ரெஸ்பான்ஸ் நேரமும் 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களின் மூலம் இனி யுபிஐ பரிவர்த்தனை வேகம் என்பது இன்னும் அதிகமாக இருக்கும். இதனால், பயனர்கள் தங்கலள் பரிவர்த்தனைகளை சில வினாடிகளுக்குள் முடித்துக்கொள்ள முடியும். பணம் திரும்ப வரவேண்டியிருந்தாலும் உடனடியாக அக்கவுண்டிற்கு ரிட்டர்ன் ஆகிவிடும். இந்த மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், அடுத்ததாக சில முக்கிய மாற்றங்களையும் ஆகஸ்ட் முதல் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இன்னும் எளிதாக்கும் வகையில்

இதன்படி, அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை ஒவ்வொரு பயனரும் 50 முறை வரையில் செக் செய்து கொள்ளலாம். அதேபோல, ஆட்டோ பேமெண்ட் விதியிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக ஒருமுறையும், 3 முறையும் மறுமுயற்சியும் செய்யலாம். பீக் நேரம் இல்லாத சாதாரண நேரங்களில் தான் இதை செய்ய முடியும். பீக் நேரங்களை பொறுத்தவரை யுபிஐ பரிவர்த்தனை உச்சத்தில் இருக்கும் நேரம் ஆகும்.

அதாவது, காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9.30 வரையிலும் ஆகும். யுபிஐ பரிவர்த்தனைகளில் அடிக்கடி முடங்குவது மற்றும் பரிவர்த்தனைகளுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது ஆகியவை பயனர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், யுபிஐ பரிவர்த்தனையை இன்னும் எளிதாக்கும் வகையிலும் பயனர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவும் இந்த புதிய மாற்றங்களை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+