அந்த ஆபத்தான உளவு ரிப்போர்ட்தான் காரணம்..இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த அமெரிக்கா ஓடி வந்தது ஏன்?
சென்னை: இந்தியா பாகிஸ்தான் போரை கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்கா.. திடீரென இந்த போர் தொடர்பாக அமெரிக்காவிற்கு ஒரு "அதிர்ச்சி அளிக்கும் உளவு தகவல்" கிடைத்த காரணத்தால்தான் வேறு வழியில்லாமல் இதில் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்ததாக சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தப்பட்டு உள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதில் அமெரிக்கா நேரடியாக தலையிடவில்லை. இது முழுக்க முழுக்க இரண்டு நாட்டு பேச்சுவார்த்தை மூலம் எடுக்கப்பட்ட முடிவுதான். ஆனாலும் இதில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான திரைமறைவு வேலைகளை அமெரிக்கா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி 2 நாடுகளுக்கு முன்பாக அமெரிக்கா அறிவித்தது.

தொடக்கத்தில் இந்த போர் விவகாரத்தில் அமெரிக்கா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. உதாரணமாக இந்த மோதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்காவின் திறனுக்கும் அவர்களின் 2 நாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை ஏற்கனவே 40 வருடங்களுக்கு மேல் அவர்கள் மோதி வருகின்றனர். நாங்கள் என்ன செய்ய முடியும்.
இந்தியா பாகிஸ்தான் மோதல் தற்போது விரிவாகி உள்ளது, இந்த நாடுகளை நாம் கட்டுப்படுத்த முடியாது. அடிப்படையில், இந்தியா பாகிஸ்தானுடன் விரோதங்களைக் கொண்டுள்ளது, மேலும் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாம் செய்யக்கூடியது என்னவென்றால், இரண்டு நாடுகளையும் சிறிது சிறிதாக பதட்டத்தைக் குறைக்க வலியுறுத்துவதுதான், ஆனால் அடிப்படையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு விஷயத்தில் தலையிட நாங்கள் விரும்பவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூட தெரிவித்து இருந்தார்.
உளவு தகவல்
இப்படி இந்தியா பாகிஸ்தான் போரை கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்கா.. திடீரென இந்த போர் தொடர்பாக அமெரிக்காவிற்கு ஒரு "அதிர்ச்சி அளிக்கும் உளவு தகவல்" கிடைத்த காரணத்தால்தான் வேறு வழியில்லாமல் இதில் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்ததாக சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளியுறவு செயலாளர் மற்றும் இடைக்கால தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்கோ ரூபியோ மற்றும் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் உள்ளிட்ட அமெரிக்க உயர் அதிகாரிகளின் முக்கிய குழு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தபோது அவர்களுக்கு ஒரு உளவு தகவல் கிடைத்ததாக சி.என்.என் குறிப்பிட்டு உள்ளது.
அமெரிக்காவிற்கு ஆபத்தான உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாக டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் சி.என்.என்-க்கு தெரிவித்தனர். ஆனால் அது என்ன தகவல்.. அந்த தகவலின் தன்மை எப்படிப்பட்டது என்று விவரிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இந்த ஆபத்தான உளவு தகவல் காரணமாகவே வேறு வழியில்லாமல் இதில் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை எடுத்ததாக சிஎன்என் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
உங்களுக்குத் தெரியும், அமெரிக்காவால் இந்தியர்களை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. பாகிஸ்தானியர்களையும் நாம் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்ல முடியாது. எனவே, இந்த விஷயத்தை நாங்கள் தொடர்ந்து இராஜதந்திர வழிகளில் கண்காணித்து வருகிறோம். சில ஆபத்தான தகவல்கள் காரணமாக இதில் நாங்கள் தலையிட வேண்டியதாகிவிட்டது என்று ஜேடி வான்ஸ் கூறியதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications