நடந்து வந்தவர் திடீர்னு பஸ்ஸில் ஏறிட்டார்.. பயணிகள் குழம்ப.. வேட்பாளர் விழிக்க உத்தரமேரூரில் கூத்து!
உத்தரமேரூர் அதிமுக வேட்பாளரின் பிரச்சாரம் இணையத்தில் வைரலாகிறது
சென்னை: ஆர்வ கோளாறு காரணமாக, வேட்பாளர் ஒருவர் பஸ்ஸில் ஏறிவிட்டார்.. இவர் பஸ்ஸில் ஏறியதுதான் பரபரபாக பேசப்பட்டு வருகிறது.
தேர்தல் களை கட்டி உள்ளது.. இந்த முறை திமுக - அதிமுக இரு தரப்புமே, வேட்பாளர்களை பார்த்து பார்த்து தயார் செய்துள்ளது..
சீட் கிடைக்காதவர்கள் ஒரு பக்கம் விரக்தியில் இருந்தாலும், சீட் கிடைத்தவர்கள், விட்ட வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்க்கட்டுகள்
இதற்காக சாலைகள், பொது இடங்கள், கடைகள், மார்க்கெட்டுகள், டீக்கடைகள் என ஒரு இடம் பாக்கி இல்லாமல் சுழன்று சுழன்று வாக்கு கேட்டு வருகிறார்கள்.. இப்படித்தான் ஒரு வேட்பாளர் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டார்.. உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சோம சுந்தரம் போட்டியிடுகிறார்.. இவர் முன்னாள் அமைச்சரும் கூட.

பிரச்சாரம்
தன்னுடைய ஆதரவாளர்களுடன் மெயின் ரோட்டில் பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார்.. அங்கு சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் துண்டு பிரசுரங்களை தந்துகொண்டே , தனக்கு ஓட்டு போடும்படி கேட்டு கொண்டே வந்தார்... அந்த நேரம் பார்த்து ஒரு பஸ், அங்கே பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது.. அந்த பஸ்ஸை பார்த்ததும் டக்கென ஏறி கொண்டார் சோமசுந்தரம்.

நோட்டீஸ்
அவர் ஏறியதும், அவருக்கு பின்னாடியே அவரது ஆதரவாளர்களும் ஏறி கொண்டனர்.. பஸ்ஸுக்குள் உட்கார்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் நோட்டீஸை தந்து, தனக்கு ஓட்டு போடும்படி சொன்னார்.. அங்கிருந்த பயணிகளோ, தாங்கள் வேறு தொகுதியை சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்.. அப்போதுதான் தெரிந்தது, சோமசுந்தரம் ஏறியது வெளிமாவட்டத்துக்கு சென்று கொண்டிருந்த பஸ்ஸில் ஏறி உள்ளது..

ஆர்வ கோளாறு
ஆர்வ கோளாறில் இவ்வாறு ஏறியுள்ளார்.. அதன்பிறகு ஒருவழியாக சுதாரித்து கொண்ட அவர், இந்த தொகுதியை சேர்ந்தவர்கள் இந்த பஸ்ஸில் இருந்தால் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லி சமாளித்தபடியே கீழே இறங்கினார்.. இந்த வீடியோதான் படுவைரலாகி வருகிறது. தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன கூத்து நடக்க போகிறதோ?
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications